பள்ளிவாசலில் தற்கொலைப் படை தாக்குதல்
27 பேர் பலி; பலர் காயம்
ஆப்கானிஸ்தானில் சம்பவம்


ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட  தற்கொலைப் படை தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியிலுள்ள கோஸ்ட் மாகாணத்தில் ராணுவம் தளம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு ராணுவ வீரர்களிக்காக பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபடுவது  வழக்கம்.

வழக்கம் போல் வெள்ளிக்கிழமையான நேற்று ராணுவ வீரர்கள் தொழுகையில்  ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத  தீவிரவாதி ஒருவர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இதில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என்று கூறபட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கானி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக தலிபான்களின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானை,  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 2001-ம் ஆண்டு மீட்டன. எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், பொலிஸாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top