இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு படுதோல்வி!
பின்னணியில் நடக்கும் சூழ்ச்சி!
அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல்
இலங்கையில்
ஆட்சிக் கவிழ்ப்பு
தோல்வி அடைந்துள்ள
போதிலும் தேர்தல்
மூலம் அந்த
ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணம் ஏற்பட்டுள்ளதாக
அமெரிக்க ஊடகம்
ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரின்பொலிஸி(
Foregin Polisy) என்ற அமெரிக்காவின் செய்தித்தளம்
இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அரசியலமைப்புக்கு
விரோதமாக செயற்பட்டு
ரணில் விக்கிரமசிங்கவின்
ஆட்சியை கவிழ்த்தார்.
இதனையடுத்து
சட்டவிரோதமாக மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்தார்.
எனினும் அவரால்
அந்த ஆட்சியை
தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை.
இது
அவரைப் பொறுத்த
வரையில் தோல்வியாக
கருதப்படுகிறது எனினும் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள
அவர் தயாராக
இல்லை.
அதேபோன்று
அவரால் நியமிக்கப்பட்ட
மஹிந்தவும் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக
இல்லை. எனவே
இருவரும் தாம்
தீர்மானித்த தேர்தல் ஒன்றுக்கு செல்வதையே குறியாக
கொண்டுள்ளனர்.
அதன்மூலம்
மீண்டும் தங்களின்
ஆட்சியை பிடிக்கலாம்
என்பதே அவர்களின்
எண்ணமாக உள்ளது
என்று அமரிக்க
செய்தித்தளம் கூறுகிறது.
0 comments:
Post a Comment