மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட
33 நாட்களில்
ஹெலிகொப்டர்
பயணங்களுக்கு
840 லட்சம் ரூபாய்
நாடாளுமன்றத்தில்
ரவி கருணாநாயக்க தெரிவிப்பு
மஹிந்த
ராஜபக்ஸ பிரதமராக
நியமிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அவர் ஹெலிகொப்டரில்
பயணம் செய்வதற்காக
840 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்
இன்று நடைபெற்ற
பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இரத்துச் செய்யும்
யோசனை மீதான
விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை
கூறியுள்ளார்.
கடந்த
அரசாங்கம் பிரதமருக்கு
வரவு செலவுத்திட்டத்தில்
ஒதுக்கப்பட்ட நிதியை சட்டவிரோதமான பிரதமர் பயன்படுத்தக்
கூடாது. எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக
பதவியேற்று இன்றுடன் 33 நாட்கள் கடந்துள்ளன. இந்த
குறுகிய காலத்திலேயே
ஹெலிகொப்டர் பயணங்களுக்கு பெருந்தொகை பணம்
செலவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment