2018.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



1. பெறுகைக்குக்குப் பின்னர் மற்றும் பின்னூட்டத்தையடுத்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 05ஆவது விடயம்)
அரசாங்கத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பெறுகைக்கு பதிலாக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கு உரிய பெறுமதி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதன் மூலம் அந்தப் பணிகள் அரசாங்கத்தின் பெறுகை வழிகாட்டல் விதிகளுக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக அரசாங்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து பெறுகைத் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பின்னரான மதிப்பிடுதல் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உத்தேசத்திட்டம் ஏனைய அமைச்சுக்களின் வேலைத்திட்டங்களுடன் இரண்டாம் நிலை ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
2. உள்ளுர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் (நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)
வெலிமடை மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் அதிக உருளைக்கிழங்கு அறுவடை கிடைத்ததினால் சந்தையில் உள்ளுர் உருளைக்கிழங்கு விநியோகம் அதிகரித்ததுடன் இந்த உற்பத்தியாளர்களுக்கு நியாயமான வில கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உருளைக்கிழங்கு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொளளப்பட்டது. இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை உருளைக்கிழங்கிற்காக உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபல சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. சிசெல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்பில் கரையோர பாதுகாப்புக்கான இரண்டு படகுகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில 07ஆவது விடயம்)

மேதகு ஜனாதிபதி அவர்கள் சிசெல்ஸ் குடியரசிற்கு இராஜதந்திர சுற்றுலா விஜயத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் சிசெல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்பில் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு படகுகளை நிர்மாணித்துத்தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. இதற்கமைவாக இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைக்காக 2 படகுகளை நிர்மாணிக்கும் பணியை இலங்கை கடற்படையினால் மேற்கொள்வதற்கு பாதகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது.

04. 1990ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான கடனைத் திரும்ப அறவிடுதல் (சிஷேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 08ஆவது விடயம்)

கடனை அறவிடுதலை துரிதப்படுத்தும் நடைமுறை விதி ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1990 ஆம் ஆண்டு இலக்கம் 2இன் கீழான கடனை திரும் அறவிடுதல் (விஷேட ஒழுங்கு விதிகள்) என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தபோதிலும் இந்த சட்டத்தின் மூலம் அப்போது நிலவிய கடனை வழங்கும் நிறுவனம் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் இதன் பின்னர் அமைக்கப்பட்ட அனுமதிபெற்ற விசேட வங்கியை இந்த சட்டப்பணிகளுக்காக உள்வாங்குவதற்கும் தேவையான உடனடி நிதியை வழஙகுவதற்கும் குறிப்பிட்ட சட்டத்தின் 31வது சரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. உள்ளுர் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக வசதிகளை செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 13வது விடயம்)

காலநிலை மற்றும் பல்வேறு காரணங்களினால் உள்ளுர் சோளத்தின் மூமான தயாரிப்பு உள்ளுர் சந்தைக்கு தேவையை பூர்த்தி செய்யக்கூடியளவிற்கு இல்லாமையினால் சோளத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கை கடந்த வருடம் முழுவதும் இடம்பெற்றது. உள்ளுர் தேசிய சோள தயாரிப்புகளை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை குறைப்பதன் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு நாணயத்தை கட்டுப்படுத்துவதற்கும் அதே போன்று தேசிய சோள உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் முடிந்துள்ளது. இதற்கமைவாக நிவாரண வட்டி விகிதத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்தன் மூலம் தேசிய சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேவையான கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கரவை பசு பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 16வது விடயம்)
இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய இன மற்றும் கலப்பின 5000 கரவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்தும் நிவசிலாந்திலிருந்தும் இறக்குமதி செய்து நாடுமுழுவதிலும் உள்ள கரவை பசு பண்ணைகளுக்கும் விநியோகிகக்கப்பட்டுள்ளது. இந்த கரவை பசுக்கள் மூலம் நாளாந்தம் 20-25 லீற்றர் இடையில் பாலைல பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் பலவீனமான முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களினால் 10-15 லீற்றர் அளவில் மிகவும் குறைந்த பால் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பண்ணைகளை பயனுள்ள வகையிலும் செயற்திறன் மிக்கதாகவும் மேம்படுத்துவதாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக தேவையான மூலோபாயங்களை மதிப்பீடு செய்து சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்காக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களமும் தேசிய பசு வள அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளைக் கொண்ட புத்திஜீவிகள் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கிராம பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜஙமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நட்புறவை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் இலங்கையில் உள்ளுராட்சி மன்ற நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நாடுகளில் உள்ள உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில 18ஆவது விடயம்)
நட்புறவு நகர எண்ணக்கருவின் கீழ் பல்வேறு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் வெளிநாடுகளில் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுடன் புரிந்துணர்வுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் அல்லது உடன்படிக்கையை எட்டுவதற்காக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை பாராட்டி எதிர்கால நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக மாகாண சபை உள்ளுராட்சி; மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகுகாரம் வழங்கியுள்ளது.
08. இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவுகளின் நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல். நிகழ்ச்சி நிரலில 30வது விடயம்)
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஜய கொள்கலன் முனைகளில் (JCT) – V இற்காக
கப்பல்களிலிருந்து தரைவரையில் கொள்கலன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான 03 கிரேன்களை இந்த அதிகார சபையின் நிதியைப்பயன்படுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 25.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட செங்ஹாய் சென்ஹுவா ஹெவி இன்டஸ்ரீஸ் நிறுவனத்திடம் வழங்குவதற்காக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கபட்பட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவில் ஆழமான நங்கூரமிடும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் சிவில் பணி ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 31வது விடயம்)
கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை கையாளுவதற்காக போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்க மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமைவாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்களல் முனைவை ஆழமான நங்கூரமிடும் ஆற்றலை அதிகரிப்பதற்காக இந்த அதிகார சபையின் நிதியைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் சிவில் பணிக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ms china Harbour engineering company Ltd  எனற நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பீடத்திற்காக 7மாடிகளைக் கொண்ட புதிய கட்டடிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைபீடத்திற்காக 7 மாடிகளைக்கொண்ட கட்டிடமொன்றை நிரமாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட சதுட பில்டர்ஸ் நிறுவனத்திற்கு 397.3 மில்லியன் ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சமூக நல்லிணக்கத்திற்காக கல்வி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 35வது விடயம்)
சமூக ஒருங்கிணைப்புக்கான கல்வித் திட்டத்தை 2005ஆம் ஆண்டிலிருந்து ஜேர்மன் அசாங்கத்தின் தொழில்நுட்ப நன்கொடையின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகும். பல்லின சமூக நல்லிணக்கத்துடன் அமைதியான முறையில் ஒன்றிணைவதற்காக பிள்ளைகள் இளைஞர்கள் அவர்களின் குடும்பம் போன்றே சமூகத்திற்கு வசதிகளை செய்யும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக 15.8 மில்லியன் யுரோக்கள் ஜெர்மன் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் 250,000 யுரோக்களை வழங்குவதற்கு ஜேர்மன் பெடரல் குடியரசு உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக கைமாறு பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கெரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12 தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க பெறுகைகளை தாமதமின்றி மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 38வது விடயம்)
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சு விடயதானத்தின் கீழ் மாற்றங்களுக்கு அமைவாக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க பெறுகை பணிகளை தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதற்காக பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதத்திற்கான அரசாங்கத்தின் செலவீனத்தை ஈடுசெய்தல். (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)
சமீபத்தில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாமையினால் இதற்கு முன்னர் மற்றும் பொதுவான சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்பட்ட எடுத்துக்காட்டான நடைமுஙைகளுக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அங்கீகரிக்க்கப்படும் வரையில் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரையில் அரச சேவைகளை தொடச்சியாக முன்னெடுக்கும் பொருட்டு தேவையான வரவு செலவு மானியத்தை இடைக்கால கணக்கின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இதற்கான பரிந்துரையை தயாரிப்பதற்கும் திருத்த சட்டத்தை முன்னெடுப்பதற்குமாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top