கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான
அனுமதி அட்டை கிடைக்காதவர்கள்
இணையத்தில் பதிவிறக்கலாம்
பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
எதிர்வரும்
3ஆம் திகதி
ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான
அனுமதி அட்டைகள் கிடைக்காத தனியார் பரீட்சார்த்திகள்
இலங்கை பரீட்சைகள்
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து
அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம்
அறிவித்துள்ளது.
WWW.doenetd.lk என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப்
பயன்படுத்தி
பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
டிசெம்பர்
மாதம் 3ஆம்
திகதி ஆரம்பமாகி
12ஆம் திகதி
நிறைவடையவுள்ள இந்தப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்கள்
ஊடாக நடைபெறவுள்ளது.
அத்துடன்
இம்முறை பரீட்சைக்கு
தோற்றவுள்ள 233791 தனியார் பரீட்சார்த்திகளின்
அனுமதியட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.