மட்டக்களப்பு
- கல்முனை நெடுஞ்சாலையில்
பஸ் விபத்து - இருவர் படுகாயம்
மட்டக்களப்பு
- கல்முனை, நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்றுள்ள வாகன
விபத்தில் இருவர்
படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி
தெரிவித்துள்ளார்.
இலங்கை
போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்று டிப்போவுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றே இவ்வாறு வீதியில்
உள்ள புளியமரத்திலும்
அதனோடிணைந்த கடையிலும் மோதுண்டுள்ளது.
அக்கறைப்பற்றிலிருந்து
பயணிகளை ஏற்றிக்கொண்டு
வவுனியா நோக்கி
புறப்படுகையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிரே
மோட்டார் சைக்கிளில்
சென்ற மீன்
வியாபாரியின் கவனக்குறைவின் காரணத்தினாலே
இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொதுமக்களும்,
பயணிகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால்
இலங்கை போக்குவரத்துச்
சபைக்கான பஸ் மற்றும் மீன் வியாபாரியின் உடமைகள்,
கடைகள் சேதமடைந்துள்ளன.
அம்பாறை
நகரைச் சேர்ந்த
50 வயதுடைய பஸ் சாரதி மற்றும் மீன் வியாபாரியும்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து
சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து
பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment