மைத்திரியின் காட்டிக்கொடுப்பு தொடர்பான

புத்தகத்தை வெளியிடும் .தே.





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காட்டிக்கொடுப்பு தொடர்பான புத்தகம் ஒன்றை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி கண்டியில் இன்று ஒழுங்கு செய்திருந்த நீதியின் மக்கள் குரல் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணிலுடன் செய்துக்கொண்ட திருணம் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக ஜனதிபதி நேற்றிரவு கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் மாபெரும் காட்டிக்கொடுப்பு தொடர்பாக புத்தகத்தை ஐக்கிய தேசிய முன்னணி வெளியிடும். மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் மக்கள் போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை.

மக்களுக்கு சரியான முறையில் விடயங்களை தெளிவுப்படுத்துவோம். நல்லாட்சியை ஏற்படுத்தி காரணமாக அமைந்த விடயங்களை மக்களுக்கு எடுத்து விளக்குவோம். கடந்த காலத்தை ஜனாதிபதி மறந்து போனாலும் நாங்கள் மறக்கவில்லை.

ராஜபக்சவினருக்கு எதிரான வழக்குகள் அடுத்த மூன்று மாதங்களில் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினர் சிறைக்கு செல்லவிருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளை சீர்குலைக்கவே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். வாழ்க்கை பாதுகாக்க மகிந்த ராஜபக்ச மாறியுள்ளார்.

தாஜூடீன் கொலை செய்யப்படும் சம்பவம் நடந்த போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து கல்கிஸ்சை மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையங்களுக்கு 46 தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி தடுத்தார். இந்த கொலையை அம்மாக்கள் திட்டமிட்டிருந்தனர்.

இவற்றுக்கு எதிராகவே நாங்கள் போராட்டம் நடத்தி நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தினோம். கொலைகள் தொடர்பான விசாரணைகள் ஏன் மந்தகதியில் நடந்தன என மக்கள் கேட்கின்றனர்.

எமது அணியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது தரப்புடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுக்க முயற்சித்தனர். கோடிக்கணக்கில் பணத்தை வழங்கினார்.

எவரும் அந்த பக்கம் போகவில்லை. அவர்கள் பக்கம் இருந்தவர்கள் எமது பக்கத்திற்கு வந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வென்றெடுத்தோம்.

மிளகாய் தூள் தாக்குதல் நடத்திய போதிலும் நாங்கள் பயப்படவில்லை. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்க முயற்சித்தோம்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தினோம். எமக்கு ஆதரவாக 121 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். சிறிசேன - ராஜபக்ச கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜனாதிபதி பதவியை கைவிடப் போவதாக நேற்று இரவு கூறியுள்ளார். அவர் நவீன மத்தும பண்டார. இறப்பதை நான் காண்பிக்கின்றேன் என்று கூறி அரச மாளிகையில் இருக்கின்றார்.

அடுத்த வராம் ராஜபக்ச - சிறிசேன கூட்டணியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைய உள்ளனர். 122 மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top