2019 பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் வெளியானது
  

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2019 பல்சர் 150 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் 2019 பல்சர் 150 விலை இந்திய ரூபாவில் ரூ.64,998 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2019 பஜாஜ் பல்சர் 150 நியான் கலெக்ஷன் என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய மாடல் புதிய நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. பல்சர் நியான் கலெக்ஷன் பின்புறம் டிரம் பிரேக் கொண்ட பேஸ் ட்ரிம் வடிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கிறது.

பல்சர் 150 மாடல் ஹோன்டா சி.பி. யுனிகான் 150, ஹீரோ அச்சீவர் 150, யமஹா எஸ்.இசட்.-ஆர்.ஆர். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 2019 பஜாஜ் பல்சர் 150 நியான் நியான் ரெட், நியான் எல்லோ மேட் பிளாக் மற்றும் நியான் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

ஹெட்லேம்ப் புருவங்கள், பல்சர் லோகோ, பின்புறம் கிராப் ரெயில், பக்கவாட்டு மெஷ், பின்புறம் 3டி லோகோ உள்ளிட்டவற்றில் கான்ட்ராஸ்ட் நியான் ஷேட் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிற அலாய்களிலும், நியான் நிற ஸ்டிரீக் செய்யப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் அம்சங்களில் 2019 பஜாஜ் பல்சர் 150 மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளிலும் 149சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 13.8 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம்., 13.4 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 240எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130எம்.எம். டிரம் பிரேக் கொண்டிருக்கிறது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top