துமிந்த திசாநாயக்க மற்றும் உதய கம்மன்பிலவுக்கு
கொழும்பில் ஏற்பட்ட பரிதாப நிலை!
இரு கலைஞர்கள் இவர்களிடமிருந்து
விருதுகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பு
கொழும்பில்
நேற்றைய தினம்
இடம்பெற்ற இளம்
கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில், இளம்
கலைஞர்கள் இருவர்
அரசியல்வாதிகளைப் புறக்கணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு
தாமரைத் தடாகத்தில், புத்தசாசன மற்றும்
மத விவகாரங்கள் அமைச்சு, தேசிய இளைஞர் சேவை
மன்றம் ஆகியவற்றின்
ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
110 கலைத்துறைகளில் ஆற்றல்களை வெளிப்படுத்திய 160 கலைத்துறையைச் சார்ந்த இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது,
சில அமைச்சர்களும்
நிகழ்வில் கலந்து
கொண்டிருந்த நிலையில், விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட
இரண்டு வெற்றியாளர்கள்
அரசியல்வாதிகளிடம் இருந்து விருதினைப்
பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
சிறந்த
குருநாடகத்திற்கான விருதினைப் பெற்ற
இரு இளம்
கலைஞர்களே இவ்வாறு
அரசியல்வாதிகளை புறக்கணித்துள்ளனர்.
மேடையில்,
அவர்களுக்கான விருது வழங்கப்படும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான
துமிந்த திசாநாயக்க
மற்றும் உதய
கம்மன்பில ஆகியோர்
விருதினை வழங்குவதற்காக
அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை
புறக்கணித்து ஏனைய ஏற்பாட்டாளர்களிடம் இருந்து இவ்விரு
கலைஞர்கள் விருதினைப்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்,
விருதினைப் பெற வந்த கலைஞருக்கு கைக்குலுக்கும்
நோக்கில் நாடாளுமன்ற
உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கை நீட்டிய
போது அதனையும்
புறக்கணித்து ஏற்பாட்டாளரிடம் இருந்து அந்த கலைஞர்
விருதினைப் பெற்றுச்சென்றுள்ளார்
0 comments:
Post a Comment