2019 முதல்
காலாண்டுக்கு ரூபா 1,735 பில்லியன்
அமைச்சரவை
அங்கீகாரம்
2019
ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலத்திற்கு அரசாங்கத்தின் பொதுசேவைகளை முன்னெடுப்பதற்காக
ரூபா 1,735 பில்லியனை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை
இணை பேச்சாளர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் இன்று
(28) கொழும்பிலுள்ள அரசாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டில் போது இதனை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று
(27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, குறித்த முடிவு எடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019
ஆம் ஆண்டிற்கான முதல் 4 மாதங்களுக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இடைக்கால
கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு
அமைய, நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைவாக
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்கும் வரையில் அடுத்த
வருடத்தின் முதல் காலாண்டிற்கு அரசாங்கத்தின் பொதுசேவைகளை முன்னெடுப்பதற்காக 760 மில்லியன்
ரூபா செலவை ஈடு செய்வதற்காக தற்பொழுது பல்வேறு சட்டங்கள் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
செலவை மேற்கொள்வதற்காக 970 மில்லியன் ரூபாவுக்கு அரசாங்கத்தின் முற்பண கணக்கு நடவடிக்கைகளுக்காக
5 பில்லியன் ரூபா ரீதியில் 1735 பில்லியன் ரூபா செலவை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர்
மஹிந்த ராஜபக்ஸவினால் குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது
(vote on account இடைக்கால நிறைவேற்றுக் கணக்கு) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதறற்காக
நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த
ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment