இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படுவதற்கு கட்சித் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்களுடனான சந்திப்பு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்றைய சந்திப்பின் போதும் ஆளும் தரப்பு கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி தலைவர்கள் சபாநாயகரின் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் பகிஷ்கரித்தனர்.
“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது... அப்படியாயின் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காக்க வேண்டும். சபாநாயகர் செய்வது சட்டவிரோத செயற்பாடு” இவ்வாறு மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சபையில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து விசேஷ பொலிஸ் விசாரணை செய்வதற்கும், அவை பற்றி ஆராய பிரதி சபாநாயகர் தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது அறிவித்தார்.
0 comments:
Post a Comment