ஜனாதிபதி வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிகிறது
- அடுத்த பிரதமர் யார்?
காமினி ஜயவிக்ரம பெரேராவா, ஜோன் அமரதுங்கவா,
சஜித் பிரேமதாசவா?


பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி தனது அணியினருக்கு வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதுடன், ஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக அங்கீகரிக்க அவர்களால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.பி. திஸாநாயக்க, லக்ஷ்மன் வசந்த பெரேரா, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால அணியினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இந்த வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினத்திற்குள் பெரும்பான்மையை நிரூபித்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தலையிடுமாறு கூறியுள்ளார்.

அப்படியில்லை எனில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மீண்டும் உடன்பாட்டுக்கு செல்ல போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு அமைய ஜனாதிபதி, எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிவடைந்ததுடன் நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுவை நியமிக்க அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானது.

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்கும் வரையான செயற்பாடுகளை எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அணியினரே கையாண்டுள்ளனர். தம்மால் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என இவர்களே ஜனாதிபதிக்கு உறுதி வழங்கியிருந்தனர்.

எந்த சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தான் உறுதி வழங்கவில்லை என்பதால், உறுதி வழங்கியவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனால், தனக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு அமைய ஐக்கிய தேசியக்கட்சியில் பிரதமர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச ஆகியோரது பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக்கட்சியில் உள்ள ஜனரஞ்சகமான தலைவர் என்பதால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள சிலர், சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பது என்பது இரண்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அந்த பதவிக்கு நியமித்த போலாகி விடும் என கூறியுள்ளனர்.

இதற்கு பதிலாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக காமினி ஜயவிக்ரம பெரேரா அல்லது ஜோன் அமரதுங்க ஆகியோரில் ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் என யோசனை முன்வைத்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி இன்றைய தினம் மிகவும் தீர்மானகரமான அரசியல் முடிவை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

எஸ்.பி. திஸாநாயக்க உட்பட அவரது அணியினரால் இலக்கை அடைய முடியவில்லை என்பதால், தொடர்ந்தும் அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில்லை பயனில்லை என கருதி ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top