திருடனின் பணத்தை திருடனிடமே ஒப்படைக்குமாறு
உத்தரவிட்டாராம் மஹிந்த!
சிங்கள ஊடகம் ஒன்று தகவல்

சட்டவிரோதமாக பெருந்தொகை பணத்தை கடத்த முற்பட்டவருக்கு ஆதரவாக செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி, வெளிநாட்டுக்கு 53000 அமெரிக்க டொலரை கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்தனர்.

அலி ரிசாத் மொப் என்ற நபரே இந்த பணத்தை சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரச உடைமையாக்குவதற்கு சுங்க பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் மஹிந்த ராஜபக்ஸ தலையிட்டு அந்த பணத்தை விடுவிக்குமாறு சுங்க பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

( வழக்கு இலக்கம் BIA/D/CASE/128/2017)2018 11.19 தினத்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றின் மூலம் மஹிந்த ராஜபக்ஸச இந்த உத்தரவை சுங்க பிரிவிற்கு வழங்கியுள்ளார்.

தற்போது இந்த மோசடியாளரை பிடித்த சுங்க பிரிவு அதிகாரியின் பணிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top