மீண்டும் அலரி மாளிகையில் வசந்த சேனநாயக்க
சுற்றுலா
மற்றும் வன
உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும்
ஐக்கிய தேசியக்
கட்சியின் பக்கம்
சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில்
நேற்று நடந்த ஐக்கிய
தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க
பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பான
படம்
ஒன்றை, தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
ஹர்ச டி
சில்வா,
“கருத்து இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய
தேசியக் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க, கடந்த
மாதம்
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இணைந்து அமைச்சராக
பதவி ஏற்றிருந்தார்.
பின்னர்,
வேண்டும் ஐக்கிய
தேசியக் கட்சிக்கு
திரும்பிய அவர், கடந்த வாரம் நடந்த
அமைச்சரவை கூட்டத்தில்
பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment