பிரதமர் மாற்றம்
தொடர்பான தீர்மானத்தை
அமைதியாக இருந்து காரியத்தை முடித்தேன்!
முழுப்பொறுப்பும் எனதே!
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
இலங்கையின் அரசியலில் பாரிய குழப்ப நிலைகள் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு
மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான நிலைக்கு முழுப் பொறுப்பும் தானே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மிகவும் சிந்தித்து பிரதமர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
ரணிலை நீக்கிவிட்டு மஹிந்தவை பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கம் ஒன்றை
உருவாக்க நன்கு சிந்தித்து தீர்மானம் மேற்கொண்டதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு
இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தான் முழுமையாக பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னரே ரணில் உட்பட
தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தால் அந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே அமைதியாக இருந்து தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம்
26ம் திகதி அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment