மஹிந்தவின் நியமனத்துக்கு எதிராக
தம்பர அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு
மஹிந்த
ராஜபக்ஸ பிரதமராக
நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை ஒன்று தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர
அமில தேரர்
இன்று இந்த
மனுவை உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளார்.
ரணில்
விக்ரமசிங்கவை பிரதமர்
பதவியில் இருந்து
நீக்கியும், மஹிந்த
ராஜபக்ஸவை பிரதமராக
நியமித்தும், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகளை
செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதியின்
இந்த உத்தரவு
அடிப்படை உரிமைகளை
மீறும் செயல்
என்று
உத்தரவிடுமாறு, கோரியுள்ள தம்பர
அமில தேரர்,
இந்த மேலும்
மீது உச்சநீதிமன்றம்
தீர்ப்பளிக்கும் வரை, பிரதமராக மஹிந்த
ராஜபக்ஸ, செயற்படவும்,
அவரது அமைச்சரவையில்
உள்ளவர்கள், அமைச்சர்களாக பணியாற்றவும் இடைக்கால தடை
விதிக்குமாறும் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment