நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
– பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 4.84 பில்லியன் ரூபா
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான
நிதி ஒதுக்கீட்டு
சட்டமூலம் இன்று
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி அரசாங்கத்தின்
மொத்த செலவினம்
,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக
பாதுகாப்பு அமைச்சுக்கு, 390.3 பில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, உள்நாட்டு விவகார மற்றும் மாகாண
சபைகள், உள்ளூராட்சி
அமைச்சுக்கு, 290.2 பில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
13.55 பில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகத்துக்கும், 1.62 பில்லியன் ரூபா பிரதமர் செயலகத்துக்கும்,
950 மில்லியன் ரூபா எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்கும்,
நாடாளுமன்றச் செலவினங்களுக்கு, 3.58 பில்லியன்
ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள்
ஆணைக்குழுவுக்கு 4.84 பில்லியன்
ரூபா ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment