இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட
ரூ. 3 கோடி பெறுமதியான தங்கம்
மூன்று
கோடி ரூபாய்
பெறுமதியான தங்க கட்டிகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக
கடத்தி வந்த
இலங்கை பயணி
ஒருவர் இன்று
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டதாக
சுங்க திணைக்களத்தின்
பதில் ஊடகப்
பேச்சாளர் விபுல
மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு
- புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான நபரே
இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
நபர் சென்னையில்
இருந்து கட்டுநாயக்க
விமானத்திற்கு சென்ற விமானத்தில் இந்த தங்கத்தை
கடத்தி வந்துள்ளார்.
சந்தேக
நபர் எலும்பு
முறிவு நோயாளிகள்
சிகிச்சைக்காக கட்டும் இடைப்பட்டியில் தங்க கட்டிகளை
மறைத்து வைத்து
கடத்தி வந்துள்ளார்.
சென்னையிலிருந்து
இல. எஸ்ஜி 001 எனும் விமானத்தில் வந்த இவர், இடைப்பட்டியில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த
4 கிலோ கிராம் எடை கொண்ட 24 கரட் தரத்திலான 40 தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment