பால்மாவின் விலை அதிகரிக்கிறது
400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபா
பால்மாவுக்கான
விலைச் சூத்திரத்தின்
படி இறக்குமதி
செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினாலும் ஒரு
கிலோகிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய,
400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாகவும்
ஒரு கிலோ
கிராம் பால்மாவின்
புதிய விலை
920 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால்மாவிற்கான
விலை சூத்திரத்தை
நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த அமைச்சரவை
கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இவ்வாறு
விலை அதிகரிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment