கல்முனை மக்களுக்கு
அபிவிருத்தி என்று கூறி
நடத்தப்பட்ட ஏமாற்றுக்
கூட்டங்களில் இதுவும் ஒன்று
பதில் தேட வேண்டியவர்கள் கல்முனை மக்களே
(2016.03.17)
கல்முனை
அபிவிருத்தி என்று கூறி சரியாக மூன்று வருடங்களுக்கு முன் கல்முனைப் பிரதேச மக்களை
அழைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட (அபிவிருத்தி???)
கூட்டங்களில் இதுவும் ஒன்று.
இன்று (2016.03.17) கல்முனை அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சர் HMM.ஹரீஸ் தலைமையில் கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரதம
அதிதியாக மு.கா தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
என அன்று தகவல் பதிவிடப்பட்டிருந்தது.
கல்முனை அபிவிருத்தியில் அக்கறை கொண்டிருந்த மர்ஹும் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களும் அக்கூட்டத்தில் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்,
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர்கள்தான் நாம் கல்முனை அபிவிருத்தி என்று கூறி ஏமாற்றப்படுகின்றோமா? இல்லை ஏமாறுகின்றோமா என்பதற்கு பதில் தேட வேண்டும்.
0 comments:
Post a Comment