சாய்ந்தமருது
பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில்
இடம்பெற்ற
அரச சேவை ஓய்வூதியர்
நம்பிக்கை நிதியத்தின்
வருடாந்தப் பொதுக் கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும்
அரச
சேவை ஓய்வூதியர்
நம்பிக்கை நிதியத்தின்
சாய்ந்தமருது பிரதேச கிளைச் சங்கத்தின் வருடாந்தப்
பொதுக் கூட்டம்
மற்றும் கௌரவிப்பு
நிகழ்வு இன்று
2019.03.16 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது
பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
அரச
சேவை ஓய்வூதியர்
நம்பிக்கை நிதியத்தின்
தலைவர் எம்.ஐ.அப்துல்
ஜப்பார் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில்
சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், அம்பாறை
மாவட்ட அரச
சேவை ஓய்வூதியர்
நம்பிக்கை நிதியத்தின்
செயலாளர் ஏ.எல்.எம்.அமீன், பொருளாளர்
எம். செல்லத்துரை
ஆகியோர் அதிதிகளாக
கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது,
மரணமடைந்த அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின்
உறுப்பினர்களுக்காக
சபையோரால் (துஆப்) பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், நடப்பாண்டுக்கான நிர்வாகத்
தெரிவு மற்றும்
கௌரவிப்பு நிகழ்வும்
இடம்பெற்றன.
ஓய்வுபெற்ற
மேலதிக மாகாணக்
கல்விப் பணிப்பாளர்
எம்.ஏ.எம்.சாபிதீன்,
ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தெளபீக்,
சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஏ.ஆர்.எம்.பாறூக்,
பிரதேச செயலக
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முஜீபா
ஆகியோர் இந்நிகழ்வில்
பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு நினைவுப் பரிசும் அரச சேவை ஓய்வூதியர்
நம்பிக்கை நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கத்தின்
உப தலைவர்
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், செயலாளர்
எம்.மீராலெவ்வை
உட்பட நிர்வாகக்
குழு மற்றும்
பொதுச் சபை
உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment