தனியார் வைத்தியசாலைகளில் உடல் பரிசோதனைக்கு
2000 ரூபாவுக்கு மேல் அறவிட முடியாது
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிப்பு
தனியார்
வைத்தியசாலைகளில் உடல் பரிசோதனைக்கு 2000 ரூபாவுக்கு மேல் அறவிட முடியாது
என சுகாதார
அமைச்சர் ராஜித
சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு
தனியார் வைத்தியசாலைகளிலும்
2000 ரூபாவுக்கும் அதிகமாக உடல்
பரிசோதனைக்கு அறவிடுகின்றார்கள் இனி அவ்வாறு செயற்பட
முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில்
இன்று நடைபெற்ற
அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உடல்
பரிசோதனை மேற்கொள்ளும்
போது, ஒவ்வொரு
நோயாளியிடமும் வைத்தியர் குறைந்த பட்சம் 10 நிமிடமாவது
உரையாட வேண்டும்
எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது
தொடர்பில் அனைத்து
வைத்திய சங்கங்களுடனும்
கலந்துரையாடிய பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் ராஜித
தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
ஒரே மாதிரியான
மருந்து பொருட்கள்
பல இடங்களில்
பல விலைகளில்
விற்கப்படுவதாகவும் இனி அவ்வாறான
செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய
மருந்து பொருட்களின்
விலை 50% அதிகரித்துள்ளதாக
கூறப்படும் கருத்து முற்றிலும் பொய் என
அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
உடல் பரிசோதனைக்கு
அதிகமாக பணம்
அறவிடும் வைத்தியசாலை
தொடர்பில் முறைப்பாடு
செய்ய முடியும்
என இதன்போது,
சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரட்ன
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment