அமெரிக்காவில் இரண்டு வயது மகன்
துப்பாக்கியால் சுட்டதில் தாய் மரணம்
அமெரிக்காவில் இரண்டு வயது மகன் துப்பாக்கியால் தற்செயலாகச் சுட்டதில் அவனது தாய் உயிரிழந்தார்.
விஸ்கான்ஸின் மாகாணம், மில்வாகீ நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ,
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மில்வாகீ நகரில் தனது கணவருடனும், 3 குழந்தைகளுடனும் வசித்து வந்தவர் பேட்ரீஸ் பிரைஸ் (26). அவரது கார் திருடு போனதையடுத்து, பாதுகாவலராகப் பணியாற்றும் தனது நண்பரின் காரை இரவல் வாங்கி அவர் செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்தக் காரில் பேட்ரீஸ் பிரைஸின் தாய், இரண்டு வயது மகன், ஒரு வயதுக் குழந்தை ஆகியோர் இருந்தனர். கார் உரிமையாளரான பாதுகாவலரின் துப்பாக்கி, உறையுடன் ஓட்டுநர் இருக்கைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தது.
அந்தத் துப்பாக்கியை விளையாட்டாக எடுத்த பேட்ரீஸ் பிரைஸின் இரண்டு வயது மகன், தற்செயலாக அதன் விசையை அழுத்தியதில் அது வெடித்ததாகத் தெரிகிறது. அதையடுத்து, ஓட்டுநர் இருக்கையை துளைத்துச் சென்ற துப்பாக்கித் தோட்டா, பேட்ரீஸ் பிரைஸ் உடலுக்குள் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதை தீவிரமாக ஆதரித்து வந்த ஜேமி கில்ட் என்பவர், கடந்த மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது 4 வயது மகனால் தற்செயலாக துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நினைவுகூரத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.