முன்னாள் சபாநயகரும் மூத்த முஸ்லிம்அரசியல்வாதியுமான
எம்.எச்.முஹம்மத் காலமானார்.
முன்னாள்
சபாநயகரும் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச் முஹம்மத் இன்று
26 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
28 ஆம் திகதி
பிறந்த இவர்
1956 ஆம் ஆண்டு
கொழும்பு மாநகர
சபை ஊடாக
தனது அரசியல்
வாழ்க்கையை ஆரம்பித்தார். 1960.01.12 ஆம்
திகதி தொடக்கம்
1963.01.10 ஆம் திகதி வரை கொழும்பு மாநகர
சபையின் மேயராக
பதவி வகித்தார்.
பொரளைத்
தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம்
சென்ற இவர்
1989.03.09 ஆம் திகதி தொடக்கம் 1994.06.24 ஆம் திகதி
வரை நாடாளுமன்ற
சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
1990ம்
ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டின்
போது அன்னாரை பாதுகாப்பதில் எம்.எச். முஹம்மத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் முக்கிய
பங்காற்றியிருந்தனர்.
எம்.எச்.
முஹம்மத் சபாநாயகர் என்ற வகையில் அரசியல் ரீதியாக பிரேமதாசவுக்கு உதவ, அஷ்ரப் சட்ட
ஆலோசனைகள் மூலம் அவருக்கு பக்கபலமாக செயற்பட்டிருந்தார்.
அதன்
பின்னர் 2006ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சுதந்திரக்கட்சிக்கு தாவிய
எம்.எச். முஹம்மத் , மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
நகர
அபிவிருத்தி அதிகார சபையும் இவரின் கீழ் செயற்பட்டிருந்தது.இவர் அக்காலத்தில் முன்னெடுத்த
செயற்திட்டங்களை பின்வந்த காலத்தில் பூர்த்தி செய்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய, எம்.எச். முஹம்மதுவுக்கு கிடைக்க வேண்டிய பெருமையை தட்டிப் பறித்துக் கொண்டிருந்தார்.
அதன்
பின்னர் 2010ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் இருந்து ஓய்வெடுத்த எம்.எச். முஹம்மத் தொடர்ந்தும்
சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
அரசியல்
மற்றும் சமூக சேவை ஊடாக மூவின மக்களின் நன்மதிப்பையும் அவர் வென்றெடுத்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களாக கடும்
சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில்
கலமானார்.
அன்னாரின்
ஜனாஸா இன்று
மாலை இடம்பெறும்
என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.