பறக்கத் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2016
Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh (السلام عليكم و
رحمة الله و بركاته)
தமிழ்
- முஸ்லிம் ஒற்றுமைக்காக முன்னின்று
தன் உயிரை
பழிகொடுத்த மர்ஹூம் யூ.எல். ஆதம்பாவா
(பறக்கத்) அவர்களின்
மறைவின் 25வது
ஆண்டை நினைவுகூறும்
வகையில் கல்முனை
றினோன் விளையாட்டுக்
கழகம் இருபதுக்கு
20 ஓவர்கள் கொண்ட இச் கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை ஒழுங்கு செய்துள்ளது.
மேற்படி
சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ளவுள்ள
கழகங்களுக்கு பின்வரும் போட்டி விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது
01. அனைத்து போட்டிகளும் 20 ஓவர்களைக் கொண்டதாகவும்
சர்வதேச T20 விதிமுறைகளுக்கு அமைவாகவும்
நடைபெறும்.
02. போட்டித்தொடரின் அனைத்து போட்டிகளும் விலகல்
(Knockout) முறையில் இடம்பெறும்.
03. போட்டியின் போது கழக வீரர்கள்
ஒருமித்த நிறச்சீருடை
(Colour Jersey) அணிதல் கட்டாயமாகும்.
04. ஒரு அணி 15 வீரர்கள் அடங்கிய
பெயர்பட்டியலை தனது அணியின் விண்ணப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
05. தங்களது அணிகள் போட்டி அட்டவணைக்கு
ஏற்ப உரிய
நேரத்திற்கு சமூகம்தர வேண்டும். காலைநேர போட்டிகள்
அனைத்தும் காலை
8.15 மணிக்கு நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்டு 8.30 மணிக்கு முதலாவது பந்து வீசப்படல்
வேண்டும். மாலை
நேரப்போட்டி பி.ப. 1.15. மணியளவில் நாணய
சுழற்சி மேற்கொள்ளப்பட்டு
1.30 மணியளவில் முதலாவது பந்து வீசப்படல் வேண்டும்.
தாமதிக்கும்பட்சத்தில் ஒவ்வொரு ஐந்து
நிமிடத்திற்கும் ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும். 20 நிமிடங்களுக்கு அதிகமாக ஒரு அணி
தாமதமாக சமூகம்
தருமானால் எதிரணிக்கு
வெற்றி வழங்கப்படும்.
(கண்டிப்பாக பின்பற்றப்படும்)
06. வெள்ளி, சனி மற்று ஞாயிறு
தினங்களின் காலை மாலை நேர போட்டிகளும்
ஏனைய வார
நாட்களில் மாலைநேர
போட்டி மாத்திரம்
இடம்பெறும்.
07. நடுவரின் தீர்ப்பே இறுதியனதாகும்.
08. போட்டிகளின்போது வீரர்கள் ஒழுங்கீனமாக நடப்பதை
எமது அவதானிப்புக்குழு
கருதுமிடத்து போட்டி நடுவர்களின் கலந்தாலோசனைகளுடன் தண்டனை வழங்கப்படும். (போட்டித்தடை)
09. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீரர்களுக்காக
விருது வழங்கப்படுவதுடன்,
சுற்றுப்போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப்
பெற்ற வீரருக்கும்,
விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரருக்கும், சுற்றுத்தொடரின் சிறப்பாட்டக்
காரருக்கும் விருதுகள் வழங்கப்படும்.
10. நிரல்படுத்தப்பட்ட போட்டிகள்
எக்காரணம் கொண்டும்
பிற்போடப்பட மாட்டாது.
11. அனைத்துப்போட்டிகளிலும் வெண்ணிற
(CA-Attack)) பந்துகள் பயன்படுத்தப்படல் வேண்டும்.
12. சுற்றுபோட்டியில் தங்களது அணி கலந்துகொள்ளும்
முதலாவது போட்டியில்
பயன்படுத்தப்படும் பந்து போட்டி
முடிவடைந்தவுடன் ஏற்பாட்டுக்குழுவிடம் வழங்கப்படல்
வேண்டும்.
13. காலநிலை சீர்கேட்டின் காரணமாக போட்டி
தடையேற்பட்டு (காலநிலை சீர்கேடு தொடர்பான இறுதி
முடிவு போட்டியில்
கடமையாற்றும் நடுவர்களினால் தீர்மானிக்கப்படும்)
அப்போட்டியின் முதல்பகுதி முடிவுற்று இரண்டாம்பகுதியின் அரைப்பகுதி முடிவுறாதபட்சத்தில்
அப்போட்டி பிரிதொரு
நாளில் நடைபெறும்.
14. காலநிலை சீர்கேட்டின் காரணமாக போட்டி
தடையேற்பட்டு அப்போட்டியின் முதல்பகுதி முடிவுற்று இரண்டாம்பகுதியின்
அரைப்பகுதியும் முடிவுறும்பட்சத்தில் போட்டியின்
முடிவு பின்வருமாறு
தீர்மானிக்கப்படும்.
Eg. 1st Innings Score 140 (20
Over) 2nd Innings (12 Over ) How many runs to get (140/20=7) Extra 1 Run per
over (8 over remain) Winning run 12 * 7+8+1=93)
15. போட்டி சமநிலையில் முடிவடையுமிடத்து super over முறை பின்பற்றப்படும்.
அதனைத் தொடர்ந்து
bowl out முறை பின்பற்றப்படும்.
16. சுற்றுப்போட்டியின் நுழைவுக்
கட்டணமாக 3,000.00 அறவிடப்படும்.
17. விண்ணப்ப முடிவுத்திகதி ஏப்ரல் 30ம்
திகதியாகும். (சுற்றுப்போட்டிக்கான நுழைவுக்கட்டணத்தை
விண்ணப்படிவம் சமர்ப்பிக்கும் போது செலுத்தும் அணிகள்
மாத்திரமே சேர்த்துக்
கொள்ளப்படும்)
18. இத்தொடரில் இறுதிப்போட்டியில்
சம்பியனாக தெரிவு
செய்யப்படும் அணிக்கு 20,000.00 பணப்பரிசும்,
பறக்கத் ஞாபகார்த்த
வெற்றிக் கிண்ணமும்
வழங்கப்படுவதோடு, இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு
10,000.00 பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படும்.
19. சுற்றுப்போட்டிக்கான குலுக்கள்
எதிர்வரும் 2016.05.02ம் திகதி
கல்முனை ஸாஹிறா கல்லூரி வீதியில்
அமைந்துள்ள PCE கல்வி நிறுவனத்தில் மாலை. 5.30 மணிக்கு
நடைபெறும்.
குறிப்பு
இச்சுற்றுப்போட்டி
எதிர்வரும் மே 7ம் திகதி முதல்
ஜூன் 4ம்
திகதி வரை
நடைபெறவுள்ளதால் கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே விண்ணப்படிவத்துடன்
கட்டுப்பணத்தை சமர்ப்பிக்கும் முதல் 24 அணிக்கே அனுமதி
வழங்கப்படும்.
சுற்றுப்போட்டிக்கான
குலுக்கள் இடம்பெறும்
தினத்தில் உரிய
நேரத்திற்கு கழகத்தில் சார்பாக இரு பிரதிநிதிகள்
கலந்து கொள்ளவது
காட்டாயமாகும்.
ஏற்பாட்டுக்குழு
0 comments:
Post a Comment