பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

விசேட செயலமர்வு;



2015 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கைநூல் (University HANDBOOK) வெளியாகியுள்ள நிலையில் அவ் அனுமதிக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் மத்தியில் தமக்கு பொருத்தமான பாடநெறி அத்துடன் அதற்கு பொருத்தமான பல்கலைகழகம் என்பனவற்றை தெரிவு செய்வதில் பல்வேறு முரண்பாடுகள், குழப்பங்கள் மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது.
தற்போதுள்ள Z புள்ளி நடைமுறையில் தங்களது கல்வித்தகமைகேற்ப தாம் விரும்பிய பாட நெறியினையும் உரிய பல்கலைகழகத்தினையும் தெரிவு நடைமுறையில் விரிவான விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் எதிர்வரும் 08.05.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை சாஹிரா கல்லுரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் காலை 9.30 இற்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இக்கருத்தரங்கானது மாணவர்களின் பல்கலைகழக தெரிவு நடைமுறை தொடர்பில் நன்கு புலமை பெற்ற வளவாளரான சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் அவர்களால் விசேடமாக வடிவமைக்கபட்ட முறையில் நடாத்தபடஉள்ளது.
முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் 2015 இல் உயர்தர பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள் உட்பட சாய்ந்தமருது கல்முனை நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று அட்டாளச்சேனை பிரதேச மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அத்துடன் பெண் மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களது பெற்றோர்களை இந்நிகழ்வுக்கு அனுப்பிவைக்கமுடியும்.
தமக்கு பொருத்தமான பாடநெறி மற்றும் பல்ககலைகழக தெரிவில் சரியான நடைமுறை கடைப்பிடிக்காத போது பல்கலைக்கழக அனுமதியே இல்லாமல் போகிற நிலைமையும் சில சந்தர்பங்களில் மாணவர்கள் எதிர்நோக்கி இருகின்றனர்.
எனவே எமது ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் எடுத்திருக்கும் இந்த பயன்தரு முயற்சி வெற்றிபெற மாணவர்களதும், பெற்றோர்களாகிய உங்களது ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
கல்முனை ஸாஹிரா கல்லூரி
குறிப்பு: உரிய நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பிக்க உள்ளதால் தங்களது வருகையினை அன்றையதினம் முற்பகல் 9.15 இற்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
செயலாளர்
0771094058

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top