ரத்தினதீபம் பட்டம் பெற்று வௌரவிக்கப்பட்ட
ஊடகவியலாளர் எம்.ரி.ஏ.கபூர்
முஹம்மட் ஜெலில்,
மலையக கலை கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் 21'ம் ஆண்டு ரத்தினதீபம்" விருது வழங்கும் வைபவம் கண்டி கெப்பிட்டிகொல ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமுக சேவையாளருமான M.T.A கபூர்.J.P ரத்தினதீபம்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாரை மாவட்ட இஸ்லாமிய சமுக நலப் பேரவை,நிந்தவூர் சிரேஷ்ட பிரஜைகள் சம்மேளனம், அகில இலங்கை சிரேஷ்ட பிரஜைகள் தேசிய ஒன்றியம் உட்பட பல சமூக சேவை அமைப்புகளின் முக்கியஸ்தராக இருந்து வரும் M.T.A. கபூர் கடந்த காலங்களில் சமுக நிலா, சமுகஜோதி, சாமஸ்ரீ தேச சக்தி பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட டிப்போ பரிசோதகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.