விபத்தில்
மரணமடைந்த ஒருவரது மரணத்தில் சந்தேகம்
தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா
விபத்தில்
மரணமடைந்த ஒருவரது
சடலம் மரண
பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டது.
இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ்
பிரிவில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில், இடம்பெற்றுள்ளது
கடந்த
11.04.2016 அன்று மரணமடைந்த நபரின் சடலமே இவ்வாறு
தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைச்சேனை
கோழிக்கடை வீதியில்
முச்சக்கர வண்டி
மற்றும் துவிச்சக்கர
வண்டி மோதுண்டதில்,
துவிச்சக்கர வண்டியில் சென்ற இப்றா லெப்பை
ஹயாத்து
முஹம்மது (வயது
- 76) காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக
சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட
நிலையில், சிகிச்சை
பலனின்றி 2016.04.12ம் திகதி
மரணமடைந்துள்ளார்.
இவரது
ஜனாஸா 2016.04.13ம் திகதி
வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
குறித்த
நபர் மரணமடைந்தமைக்கான
காரணம் கண்டறியப்படவில்லை
என்றும், மரணமடைந்தவர்
ஜனாஸா மருத்துவ
பரிசோதனை செய்யப்படாமல்
அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்
வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான்
ஏ.சி.றிஸ்வான் விடுத்த
உத்தரவின் பேரில்
ஜனாஸா தோண்டி
எடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை
மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், பொலநறுவை
மாவட்ட சட்ட
வைத்திய அதிகாரி
டாக்டர் ஏ.டி.பி.பண்டார, வாழைச்சேனை
உதவி பொலிஸ்
அத்தியட்சகர் விதானகே, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடையியல்
பிரிவு பொறுப்பதிகாரி
கே.ரவிச்சந்திரன்
ஆகியோர் முன்னிலையில்
ஜனாஸா தோண்டப்பட்டு
மருத்துவ பரிசோதனைக்காக
பொலநறுவை போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment