ஒரு ஊடகவியலாளனின் விளக்கம்.........


கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மான் என்பவர்அமைச்சர் ரிஷாட் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றிவிட்டார்என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக (எஸ்.அஷ்ரப்கான் - செய்தியாளர்) ஆகிய என்னை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் நான் பொய் செய்தி போட்டதாக குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் உண்மை தன்மையை வெளிக் கொண்டுவர வேண்டியது எனது பொறுப்பாகும். இந்த கட்டாய சூழ்நிலையை கலீலுர் ரஹ்மான் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தல் காலப்பகுதியில் கலீலுர் ரஹ்மான் வேட்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மு.கா. தேசிய காங்கிரஸ் மற்றும் ...காங்கிரஸ் கட்சியின் சார்பான வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவேளை கலீலுர் ரஹ்மானை ஆதரித்து கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவரது வீட்டில் ஏற்பாடு செய்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்ற வந்ததுதான் கலீலுர் ரஹ்மானின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் என நினைக்கிறேன். வை.எல்.எஸ். ஹமீட் இல்லாவிட்டால் சிலவேளை கலீலுர் ரஹ்மான் எடுத்த வாக்குகள் அவருக்கு கிடைத்திருக்குமா ? என்ற கேள்வி இருக்கின்றது. அவர் அரசியலுக்கு புதியவர் மற்றும் இளையவர் என்பதனால் மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் அரசியல் பயின்ற வை.எல்.எஸ். ஹமீட் இவருக்கு உதவும் நோக்குடனும் கட்சியின் வேட்பாளர் என்ற அடிப்படையிலும் பெரும் பிரயத்தனங்கள் செய்து மாற்றுக் கட்சிக்காறர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வை.எல்.எஸ். ஹமீட் கலீலுர் ரஹ்மானை அறிமுகப்படுத்தி செயற்பட்டமை அப்போது மக்களால் பெரிதும் பேசப்பட்டது.
ஆனால் அரசியலுக்கு புதியவரான கலீலுர் ரஹ்மான் தன்னை வேட்பாளராக விளம்பரப்படுத்தி இதர வேட்பாளர்களுடன் போட்டியிடுமளவுக்கு அறிமுகத்தினை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், செய்தியாளர்களும் செய்யவில்லை. இவரது செய்திகளை வெளிக்கொண்டுவரவில்லை என்ற காரணத்தினால் கல்முனையான் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய அமைப்பில் நானும் கலீலுர் ரஹ்மானும் அங்கத்தவர்கள் என்ற நட்புடனும் அறிமுகமான அடிப்படையிலும் மற்றும் அவரது சகோதரர் கரீம் எனது பாடசாலை நண்பர் என்ற காரணத்தினாலும் என்னிடம் விளம்பரம் தந்து (பேட்டி, செய்திகள் போடச் சொன்னார்) எனது எந்தச் செய்தியும் வருவதில்லை என்று மனவேதனையோடு கூறினார். இதற்காக நான் அதிக முக்கியத்துவம் அப்போது இவரது செய்திக்கு கொடுத்தேன். வெப் சைட்டுகள் தினசரி பத்திரிகை என்று இவரது செய்திகள் வெளிவந்தன.
தேர்தல் முடிந்தது இவர் தோற்றார். அதன் பின்னர் வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் றிஷாட் பதியுதீன் முரண்பாடு வரவே கலீல் தனது பிரச்சாரத்தை அதிகாரம் உள்ள பக்கம் திருப்பினார். அமைச்சர் றிஷாடுக்கு சார்பாக பேசத் தொடங்கினார். அது இப்போதும் தொடர்கிறது. அதன் பின்னணியில் இவர் தேர்தலுக்காக செலவுசெய்த பணம் கடன்பட்டது, றிஷாடை என்னால் விட முடியாது. நான் கடனாளியாக இருக்கிறேன். என்றெல்லாம் கூறினார். அதனால்தான் அமைச்சர் றிஷாட் மற்றும் வை.எல்.எஸ். ஹமீட் முறுகலுக்கான சமாதான பேச்சுவார்த்தையில் இருந்து அவர் விலகிக் கொண்டார். ஆனால் அப்போது கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் தலைவருக்கிடையிலான முறுகலை சமரசம் செய்து ஒற்றுமைப்படுத்த இவர் வை.எல்.எஸ். ஹமீடுக்கு சார்பாக பேசியபோதுதான் ஒரு நாள் மாலை வேளையில் ஆரம்பித்து எனது நித்திரையையும் தொலைக்க வைத்து மறுநாள் அதிகாலை வரை அடிக்கடி தொலைபேசியில் என்னுடன் பேசினார். அப்போதுதான் இந்த அறிக்கை அவரால் தரப்பட்டது. அது வெளியான பிறகு மீண்டும் இது எனக்கு பாதகமாக வரும்போல் தெரிகிறது. எனவே அதனை நீக்கச் சொல்லுமாறு கூறினார். அதற்குள் காலம் கடந்து எல்லா மீடியாக்களுக்கும் செய்தி பரவியிருந்தது. இவர் அறிக்கையை போடச் சொல்லும்போது போடுவதற்கும், நீக்கச் சொல்லும்போது நீக்குவதற்கும் மீடியாக்களும் நானும் இவரது சொந்தக் காரர்களும் அல்ல. இவரது வேலையாட்களுமல்ல. ஆனாலும் நான் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு சில வெப் சைட்டுகளிலிருந்து செய்தியை நீக்கிவிட்டேன்.
இந்த வேளையில் கடந்த வாரம். றிஷாட் பதியுதீன் அம்பாரை வர இருந்த வேளையில் இவரது இச்செய்தியை மீண்டும் யாரோ tag பண்ணியிருக்கிறார். அது உண்மையில் இவருக்கு பாதிப்பை ஏற்படுத்திருக்கலாம். அதற்காக என்னிடம் கூறிய விடயங்கள் பொய் என்று கூறுமளவு இவர் மடமையான முடிவை எடுத்திருக்கிறார். நான் ஊடகத்துறை சார்ந்தவன். எந்த அரசியல்வாதியையும் ஒரு ஊடகவியலாளனாக, செய்தியாளனாக இருந்து கொண்டு நம்பமுடியாது. என்ற அடிப்படையில் நான் நன்கு ஸ்திரமாக சொல்வேன். இவர் என்னிடம் பேசினார். ஆனால் இப்போது பொய் என்கிறார். அப்போது தெர்தல் காலத்தில் எனது உதவி அவரது பிரபல்யத்திற்கு தேவைப்பட்டது. ஆனால் இப்போது நான் பொய்யனா ? எனது ஊடகத்துறை அனுபவத்தில் (கடந்த 9 வருடகால) நான் யாரையும் தாக்கி மனவேதனைப்படுத்தி எனது பேனாவை எழுதியதில்லை. ஆனால் இவர் என்னை பொய்யனாக சொன்னதனால் நான் இனி தொடர்ந்தும் இவரைப்பற்றி எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எனது ஊடகத்துறை நண்பர்கள், மக்களும் எனது ஊடகப்பணியை தொடர உறுதுணையாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இன்ஷா அல்லாஹ். ஆனால் சிரேஷ்ட விரிவுரையாளர் எனச் சொல்லும் கலீலுர் ரஹ்மான் பற்றி நான் தொடர்ந்தும் எழுதுவேன். ஏனெனில் நான் பொய்யனில்லை என்பதை மக்கள் மன்றுக்கு நிரூபிக்க வேண்டும். தொடரும்

(எஸ்.அஷ்ரப்கான்-செய்தியாளர்)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top