"யாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பின்
"தாயக நூலகத் திறப்பு விழா" குறித்த அறிவித்தல்..!



புங்குடுதீவில் (பன்னிரெண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் அகடமி ஆரம்பிக்கப்பட்டு பதினான்கு ஆண்டு நிறைவு விழாவையும் மற்றும் புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு "புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்" அமைப்பினால், புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் "புங்குடுதீவு தாயகம் நூலகம்" என்ற பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மேற்படி விழா 30.04.2016 சனிக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் ஆரம்பமாகின்றது.
*** நிகழ்ச்சி நிரல்.... ***
1.    விருந்தினர்கள் அழைத்து வரல்..
2.    ". புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்" அமைப்பின் கொடியேற்றல்
(கொடியேற்றுபவர்.. திருமதி. த.சுலோசனமாம்பிகை, பிரதம போசகர், தாயகம் சமூக சேவையகம்)
3.    இறை வணக்கம்..
4.    "தாயகம் நூலக கட்டிடம்" திறந்து வைத்தல்...
(திரு. பாலச்சந்திரன் கஜதீபன், வட மாகாணசபை உறுப்பினர், &
திரு. விந்தன் கனகரட்ணம், வட மாகாணசபை உறுப்பினர்)
5.    வரவேற்பு நடனம்..
6.    வரவேற்புரை..
(செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு, ஆலோசனை சபை உறுப்பினர், -தாயகம் சமூக சேவையகம்)
7.    ஆசியுரை
(பிரம்மஸ்ரீ முரளிசர்மா, இந்து சமய குரு)
8.    தலைமையுரை
(திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை, பிரதம போஷகர், தாயகம் சமூக சேவையகம்)
9.    கோலாட்டம்...
10.   கௌரவ விருந்தினர் உரை
கௌரவ விருந்தினர்கள்....
திரு. நமசிவாயம் கமலராசா, (புங்குடுதீவு அஞ்சலதிபர்),
திரு. அருணாசலம் சண்முகநாதன், (சமூக சேவையாளர், புங்குடுதீவு),
திரு.பரமலிங்கம் தர்சானந், (நல்லூர் பிரதேச கிராம சேவையாளர்),
திரு.சி.சாந்தகுமார், (நேசன் புடவை அகம், புங்குடுதீவு),
திரு. கு.கைலைமலைநாதன், (புங்குடுதீவு நலன்விரும்பி சுவிஸ் லீஸ்)
11.   மைனா நடனம்...
12.   சிறப்பு விருந்தினர்கள் உரை
சிறப்பு விருந்தினர்கள்...
திரு. எஸ்.கே. சண்முகலிங்கம், (தவிசாளர் வேலணை பிரதேச மத்தியஸ்த சபை மற்றும் தாயகம் சமூக சேவையகம் பிரதம ஆலோசகர்)
திரு. கு.விஜயகுமார், (பொறுப்பதிகாரி, புங்குடுதீவு பிரதேச சபை)
13.   சிறப்புரை..
(செல்வி. பவிஷானா, தலைவர், -தாயகம் சமூக சேவையகம்)
14.   பிரதம விருந்தினர்கள் உரை....
பிரதம விருந்தினர்கள்..
திரு. பாலச்சந்திரன் கஜதீபன், (வட மாகாணசபை உறுப்பினர்),
திரு. விந்தன் கனகரட்ணம், (வட மாகாணசபை உறுப்பினர்)
15. நன்றியுரை...
செல்வி காஞ்சனா (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்)
**வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது** (தூரஇடங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள் அனைவரினதும் நன்மைகருதி, புங்.சித்தி விநாயகர் வித்தியாலத்துக்கு முன்னாள் மதியம் 01.30 மணிக்கு வாகனம் புறப்படும்.)
**********************************

"புங்குடுதீவு தாயகம் நூலகம்" திறப்பு விழாவன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்..!!
**புங்குடுதீவு ஈஸ்டன் விளையாட்டுக் கழகத்திற்கான அன்பளிப்பு...
(அனுசரணை சுவிஸ் "லீஸ் யங் ஸ்டார்" விளையாட்டுக் கழகம்)
**புங்குடுதீவு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பாடசாலை மாணவர்களுக்கான உதவி...
(அனுசரணை சுவிஸ் லீஸ் மாநிலத்தில் வதியும் புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலய பழைய மாணவர்கள்)
**தாயகம் சமூக சேவையகத்தின், "சொக்கலிங்கம் அகடமி"யில் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளைக் கௌரவித்தல்...
(அனுசரணை செல்வி. பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஞாபகார்த்தமாக, சுவிஸ் சூரிச்சில் வதியும் திரு. திருமதி பன்னீர்ச்செல்வம் சிவநிதி குடும்பம்)
**புங்குடுதீவு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பாடசாலையின் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட சான்றிதழ் வழங்குதல்...
(அனுசரணை - "சுவிஸ்ராகம் உதவும் கரங்கள்" சுவிஸ்)
**தாயகம் நூலகத் திறப்பு விழாவினை முன்னிட்டு புங்குடுதீவின் அனைத்துப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்க்காக நடைபெற்ற பொதுஅறிவுப் போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவ, மாணவியர்க்கான பரிசளிப்பு விழா...
(அனுசரணை புங்குடுதீவு "தாயகம் சமூக சேவையகம்")
**குறிப்பு :
மேற்படி "தாயகம் நூலகம்" அமைப்பிற்குரிய முழுமையான செலவினை "புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்" பொறுப்பெடுத்துள்ளது.
அத்துடன் "தாயகம் நூலகம்" திறப்பு விழாவுக்குரிய செலவினை அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் பேரப்பிள்ளைகளான செல்வி.தேனுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு யோகலிங்கம் (பாபு -லண்டன்) குடும்பமும், திருமதி.ஜெனனியின் பிறந்ததினத்தை முன்னிட்டு டொக்ரர் ஜெனனி தயாபரன் (லண்டன்) குடும்பமும், மூத்த புதல்வர் கருணைலிங்கத்தின் (கண்ணன் -லண்டன்) பிறந்த தினத்தை முன்னிட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
அதேசமயம் அமரர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து ஆகியோரின் ஞாபகார்த்தமாக கொழும்பு புதுச்செட்டித்தெருவில் வதியும் செல்லத்துரை சிதம்பரநாதன் அவர்கள் பத்தாயிரம் (10,000 Rp) ரூபாய் பெறுமதியான புத்தங்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
அதேபோன்று ஊரைதீவைச் சேர்ந்த அமரர்களாகிய சுப்பிரமணியம் மீனாட்சி அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவில் வதியும் சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் ஐயாயிரம் (5.000 Rp) ரூபாய் பெறுமதியான புத்தங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.)
இவ்வண்ணம்...
திருமதி.த.சுலோசனாம்பிகை,
பிரதம போஷகர்,
"தாயகம் சமூக சேவை அகம்" புங்குடுதீவு.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top