ஸகாத் நிதியங்களின் தேசிய
சபையும்
மாவட்ட சபைகளையும் நிறுவக் கோரிக்கை
நாட்டின்
பல பாகங்களிலும்
செயற்படும் ஸகாத் நிதியங்களை கூட்டிணைப்பு செய்து
தேசிய சபை
மற்றும் மாவட்ட
சம்மேளனங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய
ஷூறா சபையின்
சமூக பொருளாதார
உப குழுவின்
ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற ஸகாத் நிதியங்களின்
ஒன்றுகூடல் நிகழ்வில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்
முஸ்லிம் கலாசாரத்
திணைக்களப் பிரதிநிதிகள், ஜம்யதுல் உலமாப் பிரதிநிதிகள்,
சமய மற்றும்
துறைசார் அறிஞர்கள்
பலரும் கலந்து
கொண்டனர்.
இங்கு
பல ஸகாத்
நிதியங்களின் செயற்பாடுகள், அனுபவங்கள், சவால்கள் தொடர்பான
அறிவுகள் பகிர்ந்து
கொள்ளப்பட்டதுடன் பல பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக
தேசிய ஷூரா
சபையின் பொதுச்
சபை உறுப்பினர்
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
•இலங்கையில்
பல பாகங்களிலும்
செயற்படும் ஸகாத் நிதியங்களின் தேசிய சபையொன்றும்
மாவட்ட சம்மேளனங்களும்
ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
•ஸகாத்
நிதியங்கள் வினைத்திறன் மிக்க அமைப்பாகச் செயல்படுவதுடன்
ஸகாத் தொடர்பான
ஆரய்ச்சிகளிலும் புள்ளிவிபரங்கள் திரட்டுதலிலும்
ஈடுபடுதல் வேண்டும்.
•ஸகாத்
தொடர்பான அறிவூட்டல்
நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிரமமாக
நடாத்தப்பட வேண்டும்.
•தேசிய
சபையில் ஷரீஆ
குழுவொன்று செயற்படுவதன் மூலம் ஸகாத் நடவடிக்கைகள்
ஷரீஆவுக்குட்பட்டதாக இருப்பதை உறுதி
செய்தல் வேண்டும்.
•சகல
ஸகாத் நிதியங்களும்
முஸ்லிம் சமய
கலாசார திணைக்களத்தினால்
பதிவு செய்யப்பட்டு
கண்காணிக்கப்பட வேண்டும்.
•ஸகாத்
பெறுவதிலும் வழங்குவதிலும் நம்பகத் தன்மையுள்ள நவீன
பத்வாக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
•ஸதகாவை
சேகரித்து தகுதியான
ஏழைகளுக்கு வழங்கும் சேவையையும் ஸகாத் நிதியங்கள்
செய்ய வேண்டும்.
•ஸகாத்
நிதியத்திற்கு கிடைக்கும் நிதியத்தில் 5 வீதத்தை தேசிய
மற்றும் மாவட்ட
சம்மேளனங்களின் செயற்பாட்டுச் செலவுக்கு அனுமதித்தல் வேண்டும்.
அத்துடன்
பின்வரும் ஒருங்கிணைந்த
திட்டங்களைத் தயாரித்துச் செயற்படுத்தல் வேண்டும் எனவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1.ஏழைகளின்
சமூக பொருளாதார
அபிவிருத்திக்கான முயற்சிகள்.
2.ஏழைச்
சிறுவர்களின் கல்வி,கலாசார மேம்பாட்டீற்கான முயற்சிகள்.
3.புதிய
முஸ்லிம்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான முயற்சிகள்.
4.யாசகம்
கேட்டுச் செல்வதை
விசேடமாக வேறு
ஊர்களுக்குச் செல்வதைத் தடுத்தல்.
இவையே
அங்கு பிரேரனைகளாக
சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானங்களாக எடுக்கப்பட்ட
விடயங்களாகும் என தேசிய ஷூரா சபையின்
பொதுச் சபை
உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment