மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கம்!
அவசரப்பட்டு அறிவித்து விட்டதாக இலங்கை மீது அதிருப்தி
மீன்
ஏற்றுமதிக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருப்பதாக,
இலங்கை அரசாங்கம்
கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த
நிலையில், இலங்கை
அரசாங்கம் அவசரப்பட்டு
இந்த அறிவிப்பை வெளியிட்டது
குறித்து, இலங்கை
அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
விவகாரம் தொடர்பாக.
இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக, பிரசெல்சில் உள்ள
ஐரோப்பிய ஒன்றியத்தின்,
கடல்சார் விவகாரங்கள்
மற்றும் மீன்பிடி
தொடர்பான, பணிப்பாளர்
நாயகம், இலங்கை
அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் முடிவு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு
வெளியிடுவதற்கு முன்னதாக,மீன் ஏற்றுமதி தடைநீக்கப்பட்டு
விட்டதாக, இலங்கை
கடற்றொழில் அமைச்சு எவ்வாறு அறிவித்தது என்று
அவர் கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
கடந்த
ஏப்ரல் 21ஆம்
நாள் தொடக்கம்
மீன் ஏற்றுமதி
தடை நீக்கப்பட்டுள்ளதாக
கடற்றொழில் அமைச்சுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருப்பதாக,
கடற்றொழில் அமைச்சு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பின்னர்,
கடற்றொழில் அமைச்சு வெளியிட்ட இன்னொரு அறிக்கையில்,
இலங்கை மீதான
மீன் ஏற்றுமதி
தடையை விலக்குவது
குறித்து ஏப்ரல்
21ஆம் நாள்
முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மூன்றாவதாக
வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஊடகங்கள் அடிப்படையற்ற
தகவல்ககளை வெளியிட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சிடம்,
பிரதமர் செயலகம்
கேள்வி எழுப்பியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே,
28 நாடுகளின் அமைச்சர்கள் அங்கம் வகிக்கும், ஐரோப்பிய
ஒன்றிய அமைச்சரவையின்
அனுமதி கிடைத்த
பின்னரே, இலங்கை
மீதான மீன்
ஏற்றுமதி தடை
நீக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய
ஆணையம் கடந்த
வாரம், மீன்
ஏற்றுமதி தடையை
நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது.
இரண்டு
மூன்று மாதங்களில்,
இந்தப் பரிந்துரை
தொடர்பாக, ஐரோப்பிய
ஒன்றிய கூட்டத்தில்
விவாதிக்கப்பட்ட பின்னரே இதுபற்றிய முடிவு அறிவிக்கப்படும்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment