கிழக்கு மாகாணம் தனியாகவே இயங்க வேண்டும்
கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான
பேரவையின்யோசனைகள்
கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான பேரவையின் (KALMUNAI DEVELOPMENT & MANAGEMENT
COUNCIL-KDMC) பொதுச்செயலாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான U.M.நிஸார் அவர்களும் அதன் பொருளாளரும் ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அதிகாரியுமான மௌலவி Z.M.நதீர் அவர்களும் கலந்துகொண்டு புதிய யாப்பு சீர்திருத்தத்திற்கான யோசனைகளை சமர்பித்து தமது வாய்மூல கருத்துக்களையும் கூறினர். இதில் தேசிய பிரச்சினைக்கான முக்கிய தீர்வுகளாக பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
1. கிழக்கு மாகாணம் தனித்து இயங்கவேண்டும்.
2. தற்போதைய யாப்பின் 13 வது திருத்தத்தில் அடங்கியுள்ள உறுப்புரை 154 (A) 3 யில் கூறப்பட்டுள்ள “ இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அடுத்தடுத்த மாகாணங்களை பாராளுமன்றத்தினால் அல்லது வேறுவிதமாக இணைக்கலாம்” என்ற உறுப்புரை முற்றாக நீக்கப்படவேண்டும் என விதந்துரைக்கப்பட்டுள்ளது.
3. வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு ஏனைய மாகாணங்களை விட சமச்சீரற்ற முறையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
4. மாகாண கவர்ணரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு மாகாண நிர்வாகத்தில் ஊழல், முறைகேடுகள் இடம்பொழுது மாத்திரம் தலையீடு செய்யலாம் எனத்திருத்தப்படவேண்டும்.
5. ஏதேனும் மாகாணசபை ஓருதலைப்பட்சமாக தனியாகப்பிரிந்துசெல்லும் பிரகடனத்தைச்செய்யும் பொழுது மாகாண கவர்ணர்; அவசரகால நிலையைப்பிரகடனப்படுத்தி மாகாண ஆட்சியைப்பொறுப்பேற்கலாம்.
0 comments:
Post a Comment