குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள்
அன்பைச் செலுத்தி  அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்.



பிள்ளைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்து அவர்களை கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தண்டனையாக இருக்கின்றன.
பேச்சை கேட்காத பிள்ளையை திருத்துகின்றேன்  என்று அதிக தண்டனைகள் வழங்கினால் உங்கள் பேச்சை இன்று வேண்டுமானால் கேட்பார்கள். ஆனால் பிற்காலத்தில் உங்களைப் பற்றிய தப்பான கருத்தும், தண்டனையின் வலியும் வடுவாக அவர்கள் இதயத்தில் பதிந்துவிடும் என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் மறந்துவிடாதீர்கள்.
குழந்தைகளை இதை செய்யாதே அதை செய்யாதே என்று கூறி எதற்கு எடுத்தாலும் தண்டனை வழங்கி சித்திரவதை செய்கின்றோம். ஆகையால் தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு அறிவுரைகளால் திருத்துவதையும், வளர்ப்பதையும் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தையை அடித்து பல வித தண்டனைகள் வழங்கினால் உங்கள் குழந்தைகள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். பின் என் குழந்தை என் மீது அன்பாகவே இல்லை என்றால் பயன் இல்லை. அன்பை கொடுத்துதான் அன்பை பெற வேண்டும். கொஞ்சம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுங்கள் போதும் புரிந்து கொள்வார்கள்.
ஒரு சில குழந்தைகள் தண்டனைகளை ஆரம்ப காலத்தில் பொறுத்து கொள்வார்கள். ஆனால் போக போக அதுவே வெறுப்பாக மாறி பெற்றோர்களை எதிர்க்கும் அளவிற்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது.
தண்டனைகளைத் தாங்கி வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பயந்த சுபாவம் அடைவார்கள் என்று ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. இதனால் எப்பொழுதும் பயத்துடனே காணப்படும் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். இதனால் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

குழந்தைகள் செய்யும் சிறிய தவறுக்கு பெரிய அளவில் தண்டனை கொடுக்கும் பெற்றோர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். மேலும் வாழ்வில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கூட தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே அன்பைச் செலுத்தி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top