ஈராக் மீது போர் தொடுக்க ஜார்ஜ் புஷ்ஷுக்கு அதிகாரம் அளித்தது
தவறு என காலங்கடந்து
வருத்தம் தெரிவித்துள்ளார்
ஹிலாரி கிளிண்டன்
ஈராக் மீது போர் தொடுக்க ஜார்ஜ் புஷ்ஷுக்கு அதிகாரம் அளித்தது தவறு: என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளவருமான ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போர் நடத்துவதற்கு அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு அதிகாரம் அளித்து பாராளுமன்றத்தில் வாக்களித்ததை தனது தவறு எனவும் தெரிவித்து ள்ளார்.
அமெரிக்காவின் பிரபல செய்தி சேனல் ஒன்றில் நேயரின் கேள்விக்கு பதில் அளித்த ஹிலாரி கிளிண்டன், ஈராக்குக்கு எதிராக போர் நடத்துவதற்கு அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு அதிகாரம் அளித்து வாக்களித்ததை எனது தவறாக கருதுகிறேன்.
ஜார்ஜ் புஷ் நினைத்ததற்கு மாறாக அந்த நடவடிக்கை அமைந்து விட்டது. அதற்காக நான் வருந்துகிறேன். எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக அந்தப் போரின் விளைவு திரும்பி விட்டது எனவும் ஹிலாரி கூறியுள்ளார்.
ஈராக் நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 2011 வரை அமெரிக்கா தலைமையிலான நட்புநாடுகள் நடத்திய போரில் சுமார் 25 ஆயிரம் பேர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலாந்து நாடுகளை சேர்ந்த சுமார் மூன்று லட்சம் படைவீரர்களும், ஈராக் ராணுவத்தை சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களும் மோதினர்.
கடந்த 2008-ம் ஆண்டு ஈராக் போரை ஆதரித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் வாக்களித்ததை இவர் நியாயப்படுத்தி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment