நண்பரின்
கடனை ரத்துச் செய்யக் கோரிய ஜனாதிபதி!
மறுத்துள்ள மக்கள் வங்கி தலைவர்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வங்கிக் கடனை
ரத்துச் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பிரணாந்து
மறுத்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பிரணாந்துவிற்கு ஒருதடவை ஜனாதிபதியிடமிருந்து
தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாகவும், முதலில் நலம் விசாரித்த ஜனாதிபதி, 'உங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்னிடம் கேளுங்கள். நான் உதவுவேன்' என்று கூறி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார் என
தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது “எனது நெருங்கிய
நண்பர் ஒருவர் மக்கள் வங்கியில் பெருந்தொகை பணத்தை கடனாகப் பெற்றுள்ளார் எனவும்,
வட்டி மற்றும் தவணைத்
தொகையாக அதனை விட இரண்டு மடங்கு தொகை தற்போது செலுத்தி விட்டதாகவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எனக்காக உதவிகள்
செய்துள்ளார் என்றும் தற்போது அவருக்கு சற்று பொருளாதார நெருக்கடிகள்
இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் பெற்ற கடன்களை அறவிட முடியாக் கடனாக ரத்துச்
செய்ய முடியாதா?” என்றும் மைத்திரி
கேட்டுக் கொண்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பணிப்பாளர் சபையில் விவாதித்து விட்டு பதில் சொல்வதாக கூறிய
ஹேமசிறி, பின்னர்
ஒருநாளில் மைத்திரி அழைப்பு எடுக்கவும்' 'உங்கள் கோரிக்கையை என்னால் நிறைவேற்ற முடியாது என்றும் பணிப்பாளர் சபையில்
யாரும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றும், அவ்வாறு நாங்கள் செய்தால் பதவி இல்லாத
காலத்தில் பொலிஸ் மோசடிப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சந்திக்க நேரிடும்
என்றும், அதன் காரணமாக
சிக்கலில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை'' என்றும் கூறி மறுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
அதைக் கேட்ட மைத்திரி பதிலே இல்லாமல் தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளதாக
சிங்கள ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment