நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து
இன்று
18- ஆம் திகதி திங்கள்கிழமை ,காலை நிந்தவூர்
அட்டப்பளம் பிரதான வீதி பெரிய பாலத்தில்
தனியார் பேருந்தும்,
பத்திரிகை ஏற்றிவந்த
லொறி ஒன்றும் மோதியதில்
மூண்றுபேர் பலத்த காயங்களுக்குள்ளானார்கள் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டார்கள்.
தனியார்
பேருந்தானது மட்டக்களப்பிலிருந்து பொத்துவில்
நோக்கி சென்றுகொண்டிருந்த
போது பத்திரிகை
ஏற்றிவந்த லொறியானது
அக்கறைப்பற்றிலிருந்து
வந்துகொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில்
கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்
இவ்விபத்தில்
படுகாயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றுவருவதோடு இவ்விபத்து தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment