கதையல்ல,
இது நிஜம்!
குற்றவாளி சிறைவாசம்
முடிந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த அவரின் குடும்பத்தினருடன்
அவருக்கு தண்டனை வழங்கிய நிதிபதியும் வருகை தந்து காத்திருந்த சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில்
இடம்பெற்றுள்ளது
பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தது நீதிமன்றத்தில் - ஒருவர் குற்றவாளிக் கூண்டில், மற்றவர் நீதிபதி இருக்கையில். இது நடந்தது
கடந்த வருடம். இது
கதையல்ல, நிஜம்! (இச்செய்தியை கீழ் பகுதியில் விரிவாக வாசித்து
அறிந்து கொள்ள முடியும்)
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், மியாமி மாவட்ட நீதிமன்றத்தில் அன்று இடம்பெற்ற சம்பவம்.,
ஆர்தர் பூத் என்ற குற்றவாளியின் பெயரைக் கேட்ட நீதிபதி மிண்டி கிளேஸர், "மியாமி நாட்டிலஸ் பாடசாலையில் நீ படித்தாயா?' என்று கேட்டார்.
நீதிபதியை உற்று நோக்கிய குற்றவாளி அவரை அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் அந்தப் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள்.
ஆனால் பல்வேறு குற்றங்களைச் செய்து, பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய ஆர்தர் பூத் இப்போது ஜாமீன் கோரி, நீதிபதியான தனது பள்ளித் தோழியின் முன் நின்றார். தனது பள்ளித் தோழியை அடையாளம் கண்டு கொண்டதும் ஆர்தர் பூத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மியாமி மாவட்ட நீதிமன்றத்தில் இந்தக் காட்சி நடந்து 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆர்தர் பூத் சிறையிலிருந்து கடந்த வியாழக்கிழமை விடுதலையாகி வெளியேறினார். நன்னடத்தைக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் அவரது சிறைத் தண்டனை 10 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
சிறைவாசம் முடிந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த அவரது குடும்பத்தினருடன் நீதிபதி மிண்டி கிளேஸரும் சிறைக்கு வெளியே காத்திருந்தார் என்பதுதான் ஆச்சிரியம்!.
விடுதலை பெற்ற தனது பாடசாலைத் தோழன் ஆர்தரை தழுவிய நீதிபதி மிண்டி அவருக்கு கூறிய அறிவுரை: நல்ல வேலையை அமைத்து கொண்டு, உன் குடும்பத்தைக் கவனித்துக் கொள். நேர்மையாக இரு. பிறருக்கு நல்லது செய்யும் நிலையில் இரு. எங்கள் நம்பிக்கை பொய்த்துவிடும்படி எதுவும் செய்யாதே என்றார்.
நீதிபதி மிண்டியின் வாழ்வும் வெற்றியும் தனக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக ஆர்தர் பூத் தெரிவித்தார்.
கதையை விஞ்சும் இந்த உண்மை சம்பவம் அமெரிக்க ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மக்கள் விருப்பம்
பதிவேற்றிய இச் செய்தி இதோ........
நீதிபதியாக வந்த பள்ளித்தோழி..
கூண்டில் நின்றுகொண்டு கதறி அழுத குற்றவாளி
நெகிழ்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
புளோரிடாவில் தனது பள்ளித்தோழியினை நீதிபதியாக பார்த்த குற்றவாளி உணர்ச்சிவசப்பட்டு கதறிஅழுதுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரியாவின் மியாமியை சேர்ந்த ஆர்த்தூர் பூத்(Arthur
Booth- Age 49) என்ற நபர் தொடர் கொள்ளை,திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு நடைபெற்ற வழக்கில் ஒரு நெகிழ்ச்சியானநிகழ்வு அரங்கேறியது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக வந்த பெண்மணி Glazer என்பவர், இந்த குற்றவாளியின் பள்ளிப்பருவத்தோழியாவார்.
ஆர்த்தூரை குற்றவாளி கூண்டில் பார்த்து அதிச்சியடைந்த நீதிபதி, உங்களுக்கு என்ன நடந்தது, ஏன் இவ்வாறுமாறிவீட்டீர்கள். பள்ளிப்பருவத்தில் நீங்கள் சிறந்த மாணவராக விளங்கினீர்கள், உங்களுடன் இணைந்து நான்உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளேன். உங்களை இப்படி குற்றவாளியாக பார்ப்பது எனக்கு கவலையாகஉள்ளது என வார்த்தைகளை உதித்துள்ளார்.
இதனைக் கேட்டு ஆர்த்தூர், பதிலளிக்கமுடியாமல் கூண்டில் இருந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கதறிஅழுதுள்ளார்.
இந்த வழக்கில் ஆர்த்தூருக்கு 43,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/dtNsizpcc_I
0 comments:
Post a Comment