சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின்
இலங்கை பிரதிநிதியாக அஹமட் ஜவாட் நியமனம்
கனடாவிற்கான
இலங்கையின் உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட்டிற்கும், சர்வதேச
சிவில் விமான போக்குவரத்து அமைப்பின்
பொதுச்செயலாளர் பேங் லியூவிற்கும் இடையே
சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. இதன்போது
“சர்வதேச சிவில் விமான போக்குவரத்து
அமைப்பின் இலங்கை பிரதிநிதி” என்ற
நியமனக் கடிதம் ஒன்றை அஹமட்டிற்கு
வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
சந்திப்பு கனடாவின் மொன்றியல் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 ஆவது
சிவில் விமான சேவைகள் பணிப்பாளர்
மாநாடு இந்த வருடம் ஆகஸ்ட்டில்
நடைபெறும் என்றும், இதற்கு இலங்கை முக்கிய
பங்கு வகிக்கும் என்றும் பொதுச் செயலாளரிடம்
அஹமட் கூறியுள்ளார்.
பத்தாவது
விமான சேவைகள் மாநாடு 2017 இல்
இலங்கையில் நடைபெற உள்ளதாகவும் அஹமட்
இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்காக
இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு பொது செயலாளர் பேங்
லியூ நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச
சிவில் விமான போக்குவரத்து அமைப்பு
1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டதோடு, இதனுடன்
191 நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment