பெற்றோர்களின் கவனத்திற்கு. . .
குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பெற்றோர்கள் பின்பற்றி குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்
பெரும்பலான இருமல் சளி நோய்க்கான காரணம் வைரஸ் கிரமிகளாகும். சில நேரங்களில் பாக்டீரியா கிருமிகளால் சுவாச மண்டல நோய் ஏற்படலாம். சாதாரண சளி இருமல் நோய் உள்ள குழந்தை நன்றாக பால் குடிக்கும். மூச்சுவிடும் வேகம் சாதராணமாக இருக்கும். ஜுரம் மிதமாக இருக்கும். தீவிர நோய்க்கொண்ட குழந்தை வேகமாக மூச்சுவிடும். பால் குடிக்கத்திணறும். ஜுரமும் அதிகமாக இருக்கும்.
மூக்கில் சளி அடைத்தால் சுத்தமான துணி கொண்டு மூக்கைச்சுத்தம் செய்ய வேண்டும். பாலை சிறது சிறிதாகக் கொடுத்தால் குழந்தை இருமி வாந்தி எடுக்காது. வீட்டில் செய்யக்கூடிய துளசிச்சாறு, தேன், சுக்கு நீர் முதலியவற்றை அளவோடு கொடுக்கலாம். குழந்தைக்கு ஜுரம் இருந்தால் பாரஸிட்டமால் மருந்தை கொடுக்கலாம்.
குழந்தை வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், குழந்தை சோர்ந்து இருத்தல், இருமல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தொண்டைக்குழியின் இருபக்கங்களில் டான்ஸில் என்ற திசு இருக்கிறது. இது சில நேரங்களில் நுண்கிருமிகளால் தாக்கப்பட்டு வீங்கிவிடும். இதனால் குழந்தைக்கு தொண்டைவலி கரகரப்பு ஏற்படும். உமிழ்நீர் விழுங்குவதற்குக் குழந்தை கஷடப்படும்.
சளி இருமல் வராமல் தடுப்பது எப்படி?
* குழந்தைக்குத் தாய்ப்பால் 1 1/2 வயது வரை கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு திறன் உண்டு
* குழந்தைக்கு அடிக்கடி தலையில் நீர் ஊற்றுவது காது,. மூக்கு போன்ற துவாரங்களில் எண்ணெய் ஊற்றுவது, வாயில் கைவிட்டு சளி எடுப்பது போன்ற தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* குழந்தை இருக்குமிடத்தில் புகைப்பிடிக்ககூடாது. கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
* இருமல், சளிநோய் உள்ள பெரியவர்கள் சுகாதாரமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.
* இருமல், சளி நோய்கொண்டவர்கள் குழந்தைகளுடன் கொஞ்சக்கூடாது.
காற்றோட்டம் இல்லாத ஜனநெருக்கடி உள்ள அறைகளில் இருப்பதன் மூலமும் இருமல், சளி நோய் வருவதற்கும் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.