அம்மாவுடனே தூங்க விரும்பும் பச்சிளம் குழந்தை
குழந்தை வளர்ப்பு முறை
பிறந்த நிமிடம் முதலே குழந்தை தனது தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது
அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது.
அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை
உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
இப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே
உரிய தங்கள் முடிவெடுக்கும்
ஆற்றலை இழந்து விடுவார்கள்.
சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும்
தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள்.
இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக
அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது.
இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும்
அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.
சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக
இருப்பார்கள்.
இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள்.
அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு
விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது
குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை
விரும்புவதில்லை.
அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள்.
இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள்.
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.