வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும்
மீண்டும் இணைக்கப்படல் வேண்டுமா?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் ஆம் அல்லது
இல்லை பதிலை
நேரடியாக
எதிர்பார்க்கும் மக்கள்
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் மீண்டும் இணைக்கப்படல் வேண்டுமா? இல்லை
தற்போது இருக்கும் நிலையில் பிரிந்திருக்க வேண்டுமா?
இக்கேள்விக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத்
பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்ல ஆகியோர் இரண்டு
மாகாணங்களும் பிரியவே கூடாது இணைந்திருக்கவே வேண்டும் என்று நேரடியாகவும் தெட்டத் தெளிவாகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்து
பதிலளித்து விட்டார்கள்.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்களின் ஆதரவைப்
பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம்
இது சம்மந்தமான கேள்வியை ஊடக்வியளாளர்கள் வினவும்போது கேட்கப்படும் அந்தக்
கேள்விக்கு அன்று பிரிந்திருந்த இந்த இரண்டு
மாகாணங்களையும் முஸ்லிம்களிடம் விருப்பத்தைப் பெற்றுக் கொண்டா இணைத்தார்கள்
இப்படியான கேள்வியைக் கேட்டு எங்களை சங்கடத்திற்குள் மாட்டவேண்டாம் என்ற
அடிப்படையில் கேட்கப்படும் கேள்விக்கு விளக்கம் கொடுக்கிறாரே தவிர ஆம் அல்லது இல்லை என்ற பதிலை நேரடியாகக் கூறுவதாக இல்லை.
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் மீண்டும் இணைக்கப்படல் வேண்டுமா? இல்லை தற்போது இருக்கும் நிலையில் பிரிந்திருக்க வேண்டுமா? இக்கேள்விக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கேள்விக்கு தொடர்ந்தும்
விளக்கம் தராமல் நேரடியாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை கூற வேண்டும் என மக்கள்எதிர்பார்க்கின்றார்கள்.
0 comments:
Post a Comment