ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதி
ஈராக் படையினரால் சுற்றிவளைப்பு?
பிரிட்டன் "இண்டிபெண்டன்ட்'
நாளிதழில் தகவல்
இஸ்லாமிய
தேச (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்பின்
தலைவர் Abu Bakr
al-Baghdadi அல்-பாக்தாதியை, ஈராக்கின்
மொசூல் நகரில்
அந்த நாட்டுப்
படையினர் சுற்றி
வளைத்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும்
"இண்டிபெண்டன்ட்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
அந்த நாளிதழில்
வெளியான தகவல்:
கடந்த 2014-ஆம் ஆண்டு ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பகுதிகளைக்
கைப்பற்றி, அங்கு "இஸ்லாமியப் பேரரசை' நிறுவியதாக
அறிவித்து உலகை
அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின்
தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி.
அடுத்தடுத்து
வெற்றிகளைக் குவித்ததும், தன்னை "இஸ்லாமியப் பேரரசராக'
அறிவித்துக் கொண்டதும் அல்-பாக்தாதியை சக்தி
வாய்ந்த தலைவராக்கியது.
இந்தச்
சூழலில், ஐ.எஸ். தீவிரவாதிகள்
தங்களிடமுள்ள நிலப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து
வரும் நிலையில்,
அல்-பாக்தாதி
மொசூல் நகரில்
பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து
குர்துப் படையினரின்
தலைமைத் தளபதி
ஃபாத் ஹுசைன்
கூறியதாவது:
கடந்த
எட்டு அல்லது
ஒன்பது மாதங்களாக
ஐ.எஸ்.
தலைவர் அல்-பாக்தாதி மொசூல்
நகரில் பதுங்கியுள்ளார்.
இந்தச்
சூழலில், மொசூலை
மீட்பதற்காக ஈராக் படைகள் அந்த நகரை
சுற்றி வளைத்து
முன்னேறி வருகின்றனர்.
இதன்மூலம், அல்-பாக்தாதி ஈராக் ராணுவத்தினரிடம்
பிடிபடுவதோ, அல்லது கொல்லப்படுவதோ உறுதியாகிவிட்டது.
எனினும்,
அல்-பாக்தாதி
மொசூல் நகரில்
இருப்பதால் அந்த நகரை மீட்பதற்கான சண்டை
மிகுந்த தீவிரமானதாக
இருக்கும். அல்-பாக்தாதியைப் பாதுகாப்பதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள்
தங்கள் இறுதி
மூச்சுவரை உக்கிரமாகப்
போரிடுவார்கள் என்பதால், நகருக்குள் ஈராக் படையினரின்
முன்னேற்றம் மிகக் கடுமையானதாக இருக்கும்.
எனினும்,
அந்த நகரம்
மீட்கப்படுவதோடு அல்-பாக்தாதிக்கு முடிவு கட்டப்படும்
என்பதால், அது
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு
மரண அடியாக
இருக்கும்.
ஏற்கெனவே
ஐ.எஸ்.
தீவிரவாத அமைப்பின்
முக்கிய தலைவர்கள்
கொல்லப்பட்ட நிலையில், அல்-பாக்தாதிக்குப் பதிலாக
புதிய தலைவரைத்
தேர்ந்தெடுப்பதில் அந்த அமைப்புக்கு
மிகுந்த சிரமம்
ஏற்படும்.
வேறு
யார் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு அல்-பாக்தாதியைப் போன்ற
வசீகரம் இருக்காது
என்று ஃபாத்
ஹுசேன் கூறியுள்ளார். இவ்வாறு "இண்டிபெண்டன்ட்'
நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோசமான
வானிலை காரணமாக
மொசூல் நகருக்குள்
முன்னேறும் நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
ஈராக் ராணுவம்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment