கடற்கரையில்
கரையொதுங்கி வரும்
பெருமளவு மீன்கள்
கிழக்கு மாகாணம் திருகோணமலை கடற்கரையில், பெருமளவு
மீன்கள்
இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
பூச்சக்கன்னி என்று அழைக்கப்படும் மீன்களே,
இவ்வாறு கரையோதுங்குகின்றன எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் தொகையான மீன்கள், இதுவரை இறந்த
நிலையில் கரையோதுங்கியுள்ளதாக
அப்பகுதி மீனவர்கள்
தெரிவிக்கின்றனர். இதற்கான காரணத்தை
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து
வருகின்றனர்.
நேற்று
2ஆம் திகதி இந்த வகை மீன்கள் அதிகமாக மீனவர்களால், கரைவலை மூலம்
பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment