அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டம்

முன்னாள் அமைச்சர் .எல்.எம். அதாவுல்லாவின் நியாயமான கருத்து


நேற்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு அர தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில் அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியாயமான ஒரு கருத்தை முன் வைத்தார்.அக்கருத்திற்காக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வெளிச்சம் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது,
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாங்கள் 125 ஏக்கர் வெற்றுக் காணியை ஒதுக்கி அக்காணியில் அப்பிரதேச மக்களின் எதிர்கால நன்மை கருதி பல திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்திருந்தோம்.
அப்படி எங்களால் திட்டமிடப்பட்டிருந்த அந்தக் காணியில்தான் 40 ஏக்கர் நிலத்தில் இந்த 500 வீடுகளும் மற்றொரு அமைச்சரின் நடவடிக்கை காரணமாக கட்டப்பட்டன.
இப்படியான நிலையில் இன விகிதாசார ரீதியில் அந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு ஒன்று இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு குடியேருவதற்கு அதிகமான வெற்று நிலங்கள் அவர்கள் வாழும் பிரதேச பிரிவுகளுக்குள் உள்ளன. ஆனால். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,நிந்தவூர்.கல்முனை பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு குடியேற வெற்று நிலமில்லை. நெருக்கமான சூழலில் இப்பிரதேச முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 125 ஏக்கர் காணிதான் இவர்களுக்கு உள்ளது. அதிலும் 40 ஏக்கர் வீடமைப்புத் திட்டத்தில் போய்விட்டது.
எனவே, இந்த வீடுகளை வழங்கும் போது அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்களின் இன விகிதாசாரத்தை எடுக்காமல் அக்கரப்பற்று பிரதேசத்தில் வாழும் மக்களின் இன விகிதாசாரத்தைக் கணக்கில் எடுத்து பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இந்த ஆலோசணையை அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் ஜனாதிபதியிடனும் பிரதமருடனும் முன் வைக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியாயமான கருத்தை முன் வைத்துள்ளார்.

இதேவேளை,எதிர்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள், பாடசாலை, வைத்தியசாலை. பள்ளிவாசல் என்பன  மக்களிடம் கையளிக்கபபடும். இதற்கான உத்தரவை ஜனாதிபதி அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு வழங்கியுள்ளார் .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உத்தரவின்படி இவ் வீடமைப்புத்திட்டத்தினை உயா் நீதிமன்ற தீா்ப்பின் படி பகிர்ந்தளிக்கும் படி அறிவித்துள்ளார்.   அதற்கமைவாக  அம்பாறை மாவட்டத்தில் வாழும் மூன்று சமுகத்திடமும்  இவ் வீடுகள்  பகிர்ந்தளிக்கப்படும்எதிர்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா்  இந்த  500 வீடுகளும்  , பாடசாலை. வைத்தியசாலை. பள்ளிவசாலகள்  மக்களிடம் கையளிக்கபபடும் என அரச அதிபா் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top