23ம் திகதி முதல் 27ம் திகதி வரை
தெஹிவளை-வெள்ளவத்தை ரயில் பாதை
தற்காலிகமாக மூடப்படும்
மாத்தறை காலி மற்றும் அலுத்கமவிலிருந்து வரும் ரயில்கள்
தெஹிவளைவரையிலேயே பயணிக்கும்
கரையோர ரயில் பாதையில் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கிடையிலான ரயில் பாதை எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த 2 ரயில் நிலையங்களுக்கு இடையில்அமைந்துள்ள பழமை வாய்ந்த பாலம் ஒன்றை அகற்றி புதிய பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதனாலேயே இந்த ரயில்பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் 23ம்திகதி இரவு 10 மணியிலிருந்து எதிர்வரும் 27ம் திகதி காலை 4 மணியவரையில் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கிடையிலான பாதை மூடப்பட்டிருக்கும் .
இதேவேளை மாத்தறை காலி மற்றும் அலுத்கமவிலிருந்து வரும் ரயில்கள் தெஹிவளை ரயில் நிலையம் வரையிலேயே பயணிக்கும்.
இந்த பிரதேசத்திற்கான போக்குவரத்து தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். இதேபோன்று கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் வெள்ளவத்தை ரயில் நிலையம் வரை மாத்திரமே இந்த சேவையை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment