பொலனறுவை புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான
பொலனறுவையில் புதிய
நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான
அடிக்கல் நாட்டும்
நிகழ்வு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 25ம்
திகதி இடம்பெறவுள்ளது.
நீண்டகாலமாக
பொலனறுவை
மாவட்டத்தில் நீதிமன்ற அலுவலகமாக செயற்பட்ட கட்டடத்தில்
நீண்டகாலமாக இடப்பிரச்சினை நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின்
விசேட கோரிக்கைக்கு
அமைய இந்த
கட்டடத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இந்த
கட்டடத்தொகுதிக்கு 38 கோடி 20 இலட்சம்
ரூபா நிதி
செலவிடப்படவுள்ளது.
இந்த
கட்டடத்தொகுதி நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம்,
மேல் நீதிமன்றம்,
நீதிபதிகளின் உத்தியோகபூர்வ வீடமைப்பு, ஆவண காப்பகம்,
தொழில் நம்பிக்கை
சபை, சட்டத்தரணிகளின்
அலுவலகம் ஆகியவற்றை
கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
நாடு
முழுவதிலும் நீதிமன்ற கட்டடத்தொகுதியில்
நிலவும் குறைபாடுகளை
நிவர்த்தி செய்து
பொதுமக்களுக்கு சிறந்த நீதிச் சேவையை வழங்குவதற்காக
ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு
அமைவாக இந்த
நீதிமன்ற கட்டடத்தொகுதி
அமைக்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment