அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரல் நியமனம்

செனட் சபை ஒப்புதல்

ஆதரவாக 52 வாக்குகள். எதிராக 47 வாக்குகள் விழுந்தன


டொனால்ட் டிரம்ப் கடந்த 20-ம் திகதி ஜனாதிபதியா பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை அனுமதிக்க மறுக்கும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த அட்டார்னி ஜெனரல் சேலி யேட்ஸ் கடந்த மாத இறுதியில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்காலிக அட்டார்னி ஜெனரலாக வர்ஜீனியா கிழக்கு மாவட்ட அட்டார்னி ஜெனரல் டானா போயெண்டே நியமிக்கப்பட்டார்.


இந்த நிலையில் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம் செய்தார். ஆனால் அவரது நியமனம் பெருத்த சர்ச்சையை எழுப்பியது. இது தொடர்பான விசாரணை, பாராளுமன்ற செனட் சபையில் நடந்து வந்தது. அப்போது இருவேறு கருத்துகள் நிலவியதால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஜெப் செசன்ஸ் நியமனத்துக்கு ஆதரவாக 52 வாக்குகள் கிடைத்தன. எதிராக 47 வாக்குகள் விழுந்தன. இதனால் அவரது நியமனத்துக்கு செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்து விட்டது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top