அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
69வது தேசிய சுதந்திர தினச் செய்தி
நல்லாட்சி
மலர்ந்துள்ள இலங்கைத் திருநாட்டில் சமாதானம், பன்மைத்துவம்
மற்றும் மக்களின்
அபிலாஷைகளை நிறைவேற்றும் ஆண்டாக இந்த வருடம்
திகழவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
இன்று
(04) கொண்டாடப்படும் இலங்கையின் 69ஆவது
சுதந்திர தினத்தை
முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும்
தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில்
நல்லாட்சி மலர்வதற்கு
மக்கள் ஆணை
வழங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின்
பங்களிப்பு கனதியானது. பிரதான இரு கட்சிகளினால்
நடாத்தப்படும் நல்லாட்சியில் முஸ்லிம்களின்
ஏகபிரதிநிதி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அங்கம்
வகித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஆட்சி போலன்றி முஸ்லிம்கள்
நல்லாட்சியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள
சகல மக்களுக்கும்
சம அந்தஸ்து
வழங்கும் வகையிலும்,
மதங்களிடையே இணக்கப்பாட்டை எற்படுத்தும்
வகையிலும், மக்களிடையே பரஸ்பரம், புரிந்துணர்வை ஏற்படுத்தும்
வகையிலும், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை பூர்;த்தி செய்யும்
வகையிலும் நல்லாட்சி
அரசாங்கம் தொடர்ந்தும்
செயற்பட வேண்டும்.
இந்த
நல்லாட்சி மீதான
நம்பிக்கை சிறுபான்மையின
மக்களுக்கு இன்னும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை
உறுதிப்படுத்துவது இந்த அரசாங்கத்தின்
தார்மீகப் பொறுப்பாகும்.
இலங்கையில் சகல பிரதேசங்களிலும் வாழ்கின்ற பல்லின
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நல்லாட்சியில் அனுபவிக்கின்ற
உண்மையான சுதந்திரம்
தொடரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
0 comments:
Post a Comment