பாலியல் வழக்கில் சிக்கிய பெண்ணுக்கு

பொதுமக்கள் மத்தில் பிரம்படி:

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக கூறி அதிகாரிகளால் பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவின் Aceh மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 20 வயதான Nur Elita எனும் இளம்பெண் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவருக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.

ஷரியா சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தும் மாகாணங்களில் ஒன்று இந்தோனேசியாவின் Aceh மாகாணம். இங்குள்ள மக்கள் மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துவதாக பிடிக்கப்பட்டால், பொதுமக்கள் மத்தில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்த காணொளியை இந்தியாவில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.
Aceh மாகாணத்தில் அமைந்துள்ள Baiturrahman மசூதியில் குறித்த தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர். இதில் காதலர்கள் இருவருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காணொளியை பகிர்ந்த ஊடகவியலாளர், இது வூதி அரேபியா அல்லது ஈரான் நாட்டில் அல்ல, மாறாக கடுமையான ஷரியா சட்டங்களை கடைபிடித்துவரும் இந்தோனேசிய மாகாணத்தில் அரங்கேறியுள்ளது. பொதுமக்களும் கண்டு களிக்கின்றனர் என அவர் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top